Not must to link Aadhaar with voter list: வாக்காளர் பட்டியலுடன் இணைக்க ஆதார் எண்களை வழங்குவது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் (EC) உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
மேலும் இதை பிரதிபலிக்கும் வகையில் பதிவு படிவங்களில் “பொருத்தமான தெளிவுபடுத்தும் மாற்றங்களை” வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.
இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுகுமார் பட்ஜோஷி மற்றும் வழக்கறிஞர் அமித் சர்மா ஆகியோர் ஆஜரானார்கள்.
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “வாக்காளர்கள் பதிவு (திருத்தம்) விதிகள் 2022ன் விதி 26-பியின் கீழ் ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமில்லை” எனத் தெரிவித்தனர்.
தற்போதுள்ள வாக்காளர்கள் ஆதார் எண்ணை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை கையாளும் விதி 26B, பட்டியலில் பெயர் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு நபரும் தனது ஆதார் எண்ணை படிவம் 6B இல் பதிவு அதிகாரிக்கு தெரிவிக்கலாம் என்று கூறுகிறது.
இது, சட்டத்தின் பிரிவு 23 இன் துணைப்பிரிவு (5) இன் படி வருகிறது. இந்த மனுவை, தெலுங்கானாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி நிரஞ்சன் தாக்கல் செய்திருந்தார்.
Not must to link Aadhaar with voter list, EC tells Supreme Court
ஜூன் 17, 2002 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஏப்ரல் 1, 2023 அன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நபரும், மேற்கூறிய பிரிவின்படி தனது ஆதார் எண்ணை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்த வழக்கில், விண்ணப்பப் படிவங்களில் மாற்றங்களைச் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் தனது பரிந்துரைகளை பரிசீலிக்கவில்லை என்றும், “ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது தன்னார்வமானது” என்று நிரஞ்சன் கூறினார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்து, செப்டம்பர் 18 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ““ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது வாக்காளர்களின் பதிவு (திருத்தம்) விதிகள் 2022 இன் விதி 26-பியின் கீழ் கட்டாயமில்லை” எனக் கூறியது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல்களை இறுதி செய்யும் பணியில் ஏற்கனவே 66.23 கோடி ஆதார் எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“