பழி போடும் நேரம் இதுவல்ல; அமித்ஷாவுக்கு பினராயி பதில்

கனமழை தொடர்பாக சில நாட்களுக்கு முன்பே கேரளாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய நிலையில் இது பழி போடும் நேரம் இதுவல்ல என்று முதல்வர் பினராயி விஜயன் பதில் கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
wayan

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக புதன்கிழமை ஒரு வார்த்தைப் போர் வெடித்தது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் கூறும்போது, ​​​​கேரள அரசுக்கு ஒரு பேரிடர் ஏற்படக்கூடும் என்று மத்திய அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது என்றார். இதற்கு பதிலளித்த  முதல்வர் பினராயி விஜயன், கேரளா அரசு இதை கேட்கவில்லை என்று கூறுவது  அடிப்படை ஆதாரமற்றது என்றார். 

Advertisment

செவ்வாய்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி தற்போது வரை 276 பேர் உயிரிழந்தானர் மற்றும் 170-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணவில்லை.

வயநாடு பேரிடர் குறித்து ராஜ்யசபாவில் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசிய அமித்ஷா, கனமழை மற்றும் நிலச்சரிவுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜூலை 23 அன்று கேரள அரசுக்கு மத்திய அரசு எச்சரித்ததாகக் கூறினார்.

ஜூலை 23-ம் தேதி ஒன்பது தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து ஜூலை 24, ஜூலை 25 மற்றும் ஜூலை 26 ஆம் தேதிகளில் மாநில அரசுக்கு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Advertisment
Advertisements

இதற்கு பதிலளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அறிக்கையில், “ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. பேரிடர் பாதித்த பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கைக்கு பதிலாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதாகவும், கணிக்கப்பட்ட மழைப்பொழிவு முன்னறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார். 

ஆங்கிலத்தில் படிக்க:   Shah says Centre warned Kerala days ago; CM says not the time for blame game

பாதிக்கப்பட்ட பகுதியில் ஓடும் இருவழிஞ்சி ஆற்றுக்கு ஜூலை 23 முதல் 29 வரை வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் மத்திய நீர் ஆணையம் வழங்கவில்லை என்று கூறிய முதல்வர், “இன்று நாடாளுமன்றத்தில் பேசியது ஆடிப்படை ஆதாரமற்றது என்பதை நாம் பார்க்கலாம்,” என்றார். 

தொடர்ந்து முதல்வரின் அறிக்கையில்,  “நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பழி போட்டு தவிர்க்கும் நேரம் இதுவல்ல. காலநிலை மாற்றம் நமது சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுத்தது என்பதையும், இந்த மாற்றங்களை எதிர்கொள்ளவும் மாற்றியமைக்கவும் முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்”என்றும் அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: