எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளே எலி… 12லட்சம் ரூபாய் அம்பேல்!!!

ஒரு கதை சொல்லட்டா சார்? புலி கதை மட்டுமே கேட்ட உங்களுக்கு எலி கதை சொல்லவா? அசாம் மாநிலத்தின் தின்சுகா மாவட்டத்தில் லாய்புலி பகுதியில் இயங்கி வரும் எஸ்.பி.ஐ ஏடிஎம்-ல் கடந்த மே 19 தேதி பணத்தை வங்கி ஊழியர்கள் நிரப்பிச் சென்றனர். லட்சக்கணக்கான பணத்தை 500 மற்றும்…

By: Updated: June 19, 2018, 01:35:29 PM

ஒரு கதை சொல்லட்டா சார்? புலி கதை மட்டுமே கேட்ட உங்களுக்கு எலி கதை சொல்லவா?

அசாம் மாநிலத்தின் தின்சுகா மாவட்டத்தில் லாய்புலி பகுதியில் இயங்கி வரும் எஸ்.பி.ஐ ஏடிஎம்-ல் கடந்த மே 19 தேதி பணத்தை வங்கி ஊழியர்கள் நிரப்பிச் சென்றனர். லட்சக்கணக்கான பணத்தை 500 மற்றும் 2000 நோட்டுகளைக் கொண்டு நிரப்பிச் சென்றார்கள்.

அடுத்த நாளே, அதாவது மே 20ம் தேதி, ஏடிஎம் இயந்திரம் சீராக வேலை செய்யவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து பல பரிசோதனைக்குப் பிறகு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லை என்றும் அது ஒழுங்காக வேலைப் பார்க்கவில்லை என்றும் வங்கியிடம் புகார் அளித்தனர். புகாரை ஏற்று, எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் சிலர் இயந்திரத்தை ரிப்பேர் செய்ய ஜூன் 11ம் தேதி வந்தனர்.

Assam SBI ATM : Rat destroy Cash : அசாம் ஏடிஎம் ரூபாய் நோட்டுகள் சேதம் Assam SBI ATM : Rat destroy Cash : அசாம் ஏடிஎம் ரூபாய் நோட்டுகள் சேதம்

ஏடிஎம் இயந்திரத்தின் ஒரு பகுதியை திறந்தனர் பழுது பார்க்க வந்த ஊழியர்கள். அங்கு தான் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ‘என்ன இது?’ என அலறும் அளவிற்குக் கண் முன்னே தோன்றியது அந்தக் காட்சி. கண் இமைகள் அதிர்ச்சியில் பிதுங்க, எதுவும் பேச முடியாமல் வாயடைத்துப் போனார்கள். அப்படி என்ன காட்சி அது?

Assam SBI ATM : Rat destroy Cash : அசாம் ஏடிஎம் ரூபாய் நோட்டுகள் சேதம் Assam SBI ATM : Rat destroy Cash : அசாம் ஏடிஎம் ரூபாய் நோட்டுகள் சேதம்

சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட 500 மற்றும் 2000 நோட்டுகள் கண் முன்னே துண்டு துண்டுகளாய் கிழிக்கப்பட்டு, பெரிய குப்பை மேடு போல காட்சியளித்தது. பதற்றத்தில் திகைத்து நின்ற இவர்கள் ஏன் இப்படி ஆனது என ஆய்வு நடத்தினர். அதில், ஏ.டி.எம் உள்ளே இருந்த எலி தான் இந்தச் சேட்டையை செய்திருப்பது தெரியவந்தது.

இந்தச் சம்பவத்திற்கு பிறகு, லாய்புரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் நாசமானது தெரியவந்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Notes worth rs 12 lakh destroyed by mice inside assams tinsukia atm

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X