மத்தியப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியொன்றில் மாவட்ட ஆட்சியர் உள்பட 2 அதிகாரிகள் கலந்துகொண்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் என்ன தவறு உள்ளது” என்றார்.
இந்த ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி ஜூன் 11ஆம் தேதி நடைபெற்றது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே. மிஸ்ரா, “இந்த நடத்தை அரசு ஊழியர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுவதில்லை. இதுபோன்ற அதிகாரிகள் சட்டசபை தேர்தலில் பாரபட்சமின்றி தங்கள் கடமையை செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தன்கா, “இதுபோன்ற அதிகாரிகளை தேர்தல் பணிகளில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2018 ஆம் ஆண்டு, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடைசெய்வதாகவும், அரசு வளாகங்களில் ஆர்எஸ்எஸ் ஷாகாக்களின் செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது என்றும் வாக்குறுதி அளித்திருந்தது.
மேலும், ஆர்எஸ்எஸ் ஷகாக்களில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு 1981 இல் மத்தியப் பிரதேசத்தில் முதன்முதலில் காங்கிரஸால் விதிக்கப்பட்டது.
2006-ல் இந்தத் தடையை முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் நீக்கினார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“