என்.ஆர்.சியை ஆதரிக்கவில்லை : பாஜக கூட்டணி கட்சி திட்டவட்டம்!

குடியுரிமை சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்பட்டால் அது பிரச்சனை இல்லை. ஆனால் அதை என்.ஆர்.சியுடன் தொடர்புபடுத்தினால் அது தீண்டாமை - நிதீஷ் குமார்

Santosh Singh , Vishnu Varma

NRC, Citizenship Act criticism : JD-U says it doesn’t support NRC : ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவரான பிரசாந்த் கிஷோர் சனிக்கிழமையன்று, இக்கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே பாராளுமன்றத்தின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது ஐக்கிய ஜனதா தளம். தற்போது இக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி அதிகாரப்பூர்மாக நாடு தழுவிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

ஏற்கனவே மேற்கு வங்கத்தில் குடிமக்கள் பதிவேட்டினை கொண்டுவரமாட்டோம் என்பதை திட்டவட்டமாக மறுபடியும் மறுபடியும் கூறியுள்ளார் மம்தா. குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்ட பிறகு கேரள முதல்வர் பினராய் விஜயன் ”அரசியல் சாசனத்திற்கு எதிரான சட்டத்திற்கு இடமில்லை” என்று தன்னுடைய மறுப்பினை கூறியுள்ளார். அதே போன்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கும் இந்த குடியுரிமை சட்டத்தை இந்த மாநிலத்தில் நிறைவேற்றமாட்டோம் என்று கூறியுள்ளார்.

கேரளத்தில் இடதுசாரிகள், மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே வேறுபாடுகள் இருக்கின்ற பட்சத்திலும் கூட இந்த புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒன்றாக இணைந்து திங்கள் கிழமை திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிலைப்பாடு என்ன?

பிகார் ,மாநில முதல்வர் நிதீஷ் குமாருடன் 2 மணி நேரங்கள் ஆலோசனையில் ஈடுபட்ட பின்னர் அக்கட்சியின் துணைத்தலைவர் பிரசாந்த் கிஷோர் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.பி. குறித்தும் கட்சியின் கருத்தினை பதிவு செய்துள்ளார். ஏற்கனவே ஐக்கிய ஜனதா தளம் என்.ஆர்.சிக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டினை தெரிவித்திருந்தது.

இதில் எந்த மாற்றமும் தற்போது இல்லை என்பதையும் உறுதி செய்தார். மேலும் அவர் என்.ஆர்.சியுடன் கூடிய குடியுரிமை சட்டம் என்பது மிகவும் ஆபத்தானது. என்.ஆர்.சி. இல்லாத குடியுரிமை சட்டம் என்றால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். குடியுரிமை சட்டத்தின் கீழ் மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் அது பிரச்சனை இல்லை. ஆனால் அதை என்.ஆர்.சியுடன் தொடர்பு படுத்தினால் அது தீண்டாமையாக தான் இருக்கும் என்று முதல்வர் அறிவித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து மேலும் தன்னுடைய ட்விட்டர் பதில், குடியுரிமை சட்டம் என்பது மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. அதை மக்களிடம் இருந்து எடுத்துக் கொள்வதற்காக உருவாக்கப்படவில்லை என்று எங்களிடம் கூறப்பட்டது. ஆனால் உண்மை என்னவென்றால் என்.ஆர்.சியுடன் கூடிய குடியுரிமை சட்டம் என்பது அரசின் கையில் இருக்கும் ஒரு கொலை கருவி. இது மத அடிப்படையில் வேறுபாடுகளை தான் உருவாக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியல் சாசனம் தன்னுடைய முதல் பக்கத்திலேயே மதசார்பற்ற என்ற வார்த்தையை மூன்று முறைக்கு பயன்படுத்துகிறது. காந்திய வாத கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் ஐக்கிய ஜனதா தளம் குடியுரிமை சட்டத்தை ஆதரிப்பதாக கூறுவது வேதனை அளிப்பதாகவும் கிஷோர் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று, மூத்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.சி.பி சிங் கிஷோர் குமாரை ஏதோ விமர்சனம் செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து கிஷோர் ராஜினாமா செய்ய முற்பட கட்சிக்காக பணியாற்றுமாறு நிதீஷ் அறிவுறுத்தியுள்ளார்.

ஐக்கிய ஜனதா தளத்தின் இந்த முடிவு வெளியான பிறகு பிகாரின் பாஜக தலைவர் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால் “பாஜகவின் நிலைப்பாடு நன்றாகவே அனைவருக்கும் தெரியும். ஆனால் கிஷோரின் நிலைப்பாடு குறித்து இதுவரை நான் ஒன்றும் கேள்விப்படவில்லை. தேசிய பாஜக தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே என்ன கூறினாரோ அந்த நிலைப்பாட்டை தான் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். குடியுரிமை சட்டத்தின் மகிமையை நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.

கேரளாவில் இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்காக முதல்வர் பினராய் விஜயனிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close