இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க 15 ஆவணங்களும் போதவில்லை… என்.ஆர்.சியில் நீடிக்கும் குழப்பம்!

நில வருவாய் கட்டியதற்கான சான்றுகள் ஒருவரின் குடியுரிமையை உறுதி செய்யாது. தீர்ப்பாயம் சரியாக ஆவணங்களை சரிபார்த்து தான் இந்த முடிவினை எட்டியுள்ளது.

By: Published: February 19, 2020, 1:00:48 PM

Tora Agarwala 

NRC Jabeda Begum submitted 15 documents : அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை முறைப்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்தமுறை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்திய பிரஜை என்று உறுதி செய்யப்படாதவர்கள் தங்களின் முறையான ஆவணங்களை ”வெளிநாட்டினர் தீர்ப்பாயத்திடம்” (Foreign Tribunal) சமர்பித்து என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான முழுமையான செய்திகளைப் ஆங்கிலத்தில் படிக்க

நான்கு ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஆவணம், ,பெற்றோர்களின் என்.ஆர்.சி க்ளியரன்ஸ், நில வருவாய் செலுத்திய ரசீதுகள், ஊர் தலைவரிடம் வாங்கிய நிரந்தர குடியிருப்பு ஒப்புகை சீட்டு, ரேசன் கார்டு, பான் கார்டு, வங்கிக் கணக்கு அட்டை ஆகியவையவற்றை ‘இந்திய பிரஜை’ என்பதை நிரூபிப்பதற்கு போதுமானதாக இல்லை என்று கூறி நிராகரித்துவிட்டது கௌஹாத்தி உயர் நீதிமன்றம்.

என்.ஆர்.சி பட்டியலில் இருந்து விடுபட்ட ஜபேதா பேகம் எனப்படும் ஜபேதா கத்துன், கௌஹாத்தியில் உள்ள பஸ்கா மாவட்டத்தின் தமுல்பூர் பகுதியை சேர்ந்த இவர் தன்னுடைய ஆவணங்களை சமர்த்து பட்டியலில் இணைத்துக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் 2019ம் ஆண்டு மே மாதம் அவருடைய கோரிக்கையை நிராகரித்தது ஃபாரீனர்ஸ் ட்ரைபுனல். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் தற்போது தோல்வியை சந்தித்துள்ளார் ஜபேதா.

NRC Jabeda Begum submitted 15 documents

என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெற வேண்டுமென்றால் இரண்டு விதமான பட்டியல்களில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆவணங்களை சமர்பிக்க வேண்உம். 1971ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள் என்றால் அவர்களுடைய முன்னோர்கள் இந்தியாவினர் தான் என்பதை நிரூபிக்க 1951ம் ஆண்டு எடுக்கப்பட்ட என்.ஆர்.சி பட்டியல் மற்றும் 1971ம் ஆண்டுக்கு முன்பான வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். 1971ம் ஆண்டுக்கு பின்பு பிறந்திருப்பின் பான் கார்டு பிறப்பு சான்றிதல் மற்றும் 1971ம் ஆண்டுக்கு முன்பு அவர்களுடைய பெற்றோர்கள் இந்தியாவில் வசித்திருப்பதை பூர்த்தி செய்ய ஆவணம் எதாவது ஒன்றை சமர்பிக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

ஜபேதா பேகத்தின் வழக்கறிஞர் அகமது அலி கூறும் போது “ஜபேத மிகவும் அமைதியானவர், கல்வி அறிவற்றவர். நாங்கள் நிறைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். ஆனால் அவையாவும் அவருடைய பெற்றோர்களுடன் அவருக்கு இருக்கும் தொடர்பை நிரூபிக்க தவறிவிட்டது. இதுகுறித்து மற்றொரு வழக்கறிஞர் கூறிய போது “1977ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இவருடைய பெற்றோர்களின் பெயர்களுக்கு பதிலாக கணவரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. மேலும் அங்கு சந்தேகத்திற்குரியவர் என்பதை நிரூபிக்கும் “D”என்ற எழுத்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் தான் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் தனக்குமான உறவினை அவரால் நிரூபிக்க இயலவில்லை என்று தெரிவித்தார்.

ஆனால் காவுன் பஞ்சாயத்து அளித்த ஆவணம் ஏற்புடையது. ஜபேதா மேல்முறையீட்டு மனுவை சமர்பிக்கலாம். தன்னுடைய கிராம தலைவர் கொடுத்த ஆவணடஹ்தி ஏன் ஏற்றுக் கொள்ள தவறியது என்று கேட்கலாம். மேலும் அவருடைய சகோதரன் இவரை தன்னுடைய சகோதரி என்று நிரூபித்தாலும் இவரை பட்டியலில் இணைத்துக் கொள்வார்கள். இவருடைய குடும்பத்தில் இவருடைய பெற்றோர்கள் மற்றும் சகோதரரும் முந்தைய, இன்றைய பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தீர்ப்பில் இடம்  பெற்ற முக்கிய அம்சம்

நீதிபதிகள் வெளியிட்டுள்ள தீர்ப்பில் “மறைந்த ஜாபேத் அலி மற்றும் ஜஹூரா கத்துனின் மகள் என்று ஜபேதா அறிவித்துள்ளார். ஆனால் அவருடைய பெற்றோர்களுக்கும் தனக்குமான உறவினை உறுதி செய்ய போதுமான ஆதாரங்களை அவர் அளிக்கவில்லை. கிராமத்தலைவரிடம் இருந்து கிடைக்கும் சான்றானது ஒருவரை இந்திய பிரஜை என்பதை உறுதி செய்ய போதுமானதாக இல்லை. திருமணான பெண் ஒருவர் தன்னுடைய பிறந்த கிராமத்தில் இருந்து கணவனின் கிராமத்திற்கு வரும் போது அளிக்கப்படும் சான்று தான் அது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகமது பாபுல் இஸ்லாம் என்பவர் மத்திய அரசுக்கு எதிராக தொடுத்த வழக்கின் (WP(C)/3547/2016) தீர்ப்பில் பான் கார்ட் மற்றும் வங்கி ஆவணங்களை வைத்து ஒருவர் இந்நாட்டு பிரஜை என்பதை நிரூபிக்க இயலாது என்று குறிப்பிடப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டியுள்ளனர். மேலும் 33 வயதான சம்சூல் அலி தன்னுடைய சகோதரன் என்று கூறுகிறார் ஜபேதா. ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையேயான சகோதர உறவை நிரூபிக்கவும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

நில வருவாய் கட்டியதற்கான சான்றுகள் ஒருவரின் குடியுரிமையை உறுதி செய்யாது. தீர்ப்பாயம் சரியாக ஆவணங்களை சரிபார்த்து தான் இந்த முடிவினை எட்டியுள்ளது. தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் தனக்குமான உறவை ஜபேதா நிரூபிக்கவில்லை என்பதை நாங்கள் மீண்டும் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்கின்றோம் என்று அறிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Nrc jabeda begum submitted 15 documents but none proved her citizenship

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X