/tamil-ie/media/media_files/uploads/2018/01/supreme-court...jpg)
local body, local body Tamil Nadu, Local body elections Tamil Nadu, Local body elections in Tamil Nadu, உள்ளாட்சி தேர்தல் வழக்கு, பஞ்சாயத்து தேர்தல்
NRC List : அசாம் மாநிலத்திற்கான தேசிய குடிமக்கள் பதிவு
NRC List for Assam Citizens: அசாம் மாநிலத்திற்கான தேசிய குடிமக்கள் பதிவு என்று சொல்லப்படும் NRC அசாம் மாநிலத்தில் பழக்கத்தில் ஒரு பதிவாகும். அப்பதிவின் மூலம், வங்கதேசத்தில் இருந்தும், மற்றும் அருகில் இருக்கும் இதர நாடுகளில் இருந்தும் சட்டத்திற்கு புறம்பாக நாட்டிற்குள் நுழைபவர்களை தடுக்கும் வகையில் 1951ல் உருவாக்கப்பட்டது.
ஆனால் சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட 3.29 கோடி மக்களின் பதிவுகளில் இருந்து சுமார் 40 லட்சம் நபர்களின் பெயர்களை நீக்கியிருக்கிறது மத்திய அரசு.
இது தொடர்பான வழக்கினை விசாரித்து வந்த ரஞ்சன் கோகெய் மற்றும் ஆர்.எஃப். நரிமன் நீதிபதிகள், எக்காரணம் கொண்டும் NRC List பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்கள்.
மேலும் உள்ளூர் ரெஜிஸ்டர் அலுவலகங்களில், இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கான முறையான காரணங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை விரைவில் சமர்பிக்க வேண்டும் என்று கூறினர்.
To read this article in English
காங்கிரஸ் கட்சி மீது விமர்சனம் வைத்த அமித் ஷா
இது தொடர்பாக இன்று பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, ராஜீவ் காந்தி ஆட்சிக்கு பின்பு NRC of Assam -னை முறையாக கவனித்து வர தவறிவிட்டது காங்கிரஸ் என்று சரமாரியாக குற்றச்சாட்டு வைத்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது குறித்து பேசிய போது ”நம் நாட்டின் குடிமக்களையே அகதிகளாக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது” என்று கூறினார்.
மேலும் புகலிடம் தேடி அசாமிலிருந்து மேற்கு வங்கம் வருபவர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்வது எங்களின் கடமை என்றும், மேற்கு வங்கம் உங்களுக்கான கதவினை திறந்து வைத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.