Advertisment

100 நாள் வேலைத் திட்டம்: மாநிலங்களுக்கு 2-10% ஊதிய உயர்வு.. தமிழ்நாட்டிற்கு எவ்வளவு?

ராஜஸ்தான் மாநிலத்திற்கு அதிகபட்சமாக 10.39 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
MNREGS

Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, 2005

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005-ன் கீழ் 2023-24 நிதியாண்டிற்கான புதிய ஊதிய விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திற்கு அதிகபட்சமாக 10.39 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் கோவா மாநிலத்திற்கு குறைந்தபட்சமாக 2.2 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005, பிரிவு 6-இன் உட்பிரிவு (1) இன் கீழ் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

NREGS ஊதிய விகிதத்தின்படி ஹரியானா மாநிலத்திற்கு நாளொன்றுக்கு ரூ.357 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.221 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2023-24-ம் ஆண்டிற்கான புதிய ஊதிய விகிதத்தின்படி ராஜஸ்தான் மாநிலத்திற்கு 10.39 சதவீதம் அதிகரித்து ஒரு நாளைக்கு ரூ.255 ஆக உயர்ந்துள்ளது. முன்பு 2022-23-ல் ரூ.231 ஆக இருந்தது. அடுத்தபடியாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் 8.57 சதவீத ஊதிய உயர்வு பெற்றுள்ளது.

NREGS புதிய ஊதிய விகிதத்தில் கோவாவிற்கு 2.22 சதவீதம் என்ற அளவில் குறைந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2022-23-ல் ஒரு நாள் ஊதியம் ரூ. 315 இல் இருந்து 2023-24 இல் ரூ. 322 என அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து கர்நாடகாவிற்கு 2.27 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி ஒரு நாள் ஊதியம் ரூ. 309 இல் இருந்து ரூ. 316 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு எவ்வளவு?

7 மாநிலங்கள் தற்போதைய (2022-23) விகிதங்களை விட 2023-24க்கான ஊதிய விகிதங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவான உயர்வை பெற்றுள்ளன. மேகாலயா (3.4 சதவீதம்), மணிப்பூர் (3.59 சதவீதம்), அருணாச்சல பிரதேசம் (3.7 சதவீதம்), நாகாலாந்து (3.7 சதவீதம்), அசாம் (3.93 சதவீதம்), தமிழ்நாடு (4.63 சதவீதம்), மற்றும் புதுச்சேரி (4.63 சதவீதம்) ஊதிய உயர்வு பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Mgnrega
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment