Advertisment

சிபிஐ சிறப்பு இயக்குநருக்கு லஞ்சம் அளித்த விவகாரம்... சர்ச்சையில் மாட்டும் மத்திய அமைச்சர்

ராகேஷ் அஸ்தானா வழக்கினை விசாரணை செய்த சிபிஐ டி.ஐ.ஜி எம்.கே. சின்ஹாவை நாக்பூருக்கு மாற்றுதல் அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிபிஐ டி.ஐ.ஜி எம்.கே. சின்ஹா, CBI DIG M.K. Sinha, Rakesh Asthana, Haribhai Parthibhai Chaudhari

சிபிஐ டி.ஐ.ஜி எம்.கே. சின்ஹா

சிபிஐ டி.ஐ.ஜி எம்.கே. சின்ஹா : சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது லஞ்சம் பெற்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார் சிபிஐ டி.ஐ.ஜி எம்.கே சின்ஹா.  விசாரணை முடித்து தகவல் அறிக்கை தாக்கல் செய்த எம்.கே. சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் National Security Adviser அஜித் தோவல், ராகேஷ் அஸ்தானாவின் வழக்கு விசாரணையில் குறுக்கீடு செய்ததாகவும், ராகேஷ் அலுவலகத்தில் சோதனை செய்ய சிபிஐ முயற்சி செய்த போது அதற்கு தடையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.

Advertisment

சிபிஐ டி.ஐ.ஜி எம்.கே. சின்ஹா தாக்கல் செய்த மனு

மேலும் மொயீன் குரோஷி வழக்கில் இருந்து தொழிலதிபர் சனா சதீஸ் பாபுவை விடுதலை செய்ய 2 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றார் ராகேஷ் அஸ்தானா பெற்றார் என்று சனா பாபு கூறியிருந்தார். தற்போது மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க இணை அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சௌத்திரிக்கும் லஞ்சம் அளிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்த அமைச்சர் நரேந்திர மோடியின் நெருங்கிய வட்டத்தில் ஒருவராவர்.

இந்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எம்.கே. சின்ஹாவினை நாக்பூருக்கும் மாற்றி உத்தரவிட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் எம்.கே. சின்ஹா. அந்த மனுவில் இந்த விவகாரத்தினை இணைத்திருக்கிறார் எம்.கே. சின்ஹா. இந்த வழக்கை அவசரமாக விசாரித்து, தனது இடமாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவினை கட்டாய விடுப்பில் அனுப்பியது தொடர்பான வழக்கினை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம். அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment