பாலஸ்தீனம், லெபனான், ஈரான் தூதர்களின் கருத்தரங்குகளை திடீரென ரத்து செய்த ஜே.என்.யு

நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கான முடிவு பல்கலைக்கழகத்தால் எடுக்கப்பட்டுள்ளது, அதற்கான காரணங்களை அவர்கள் கூறவில்லை என ஈரானிய மற்றும் லெபனான் தூதரகங்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.

நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கான முடிவு பல்கலைக்கழகத்தால் எடுக்கப்பட்டுள்ளது, அதற்கான காரணங்களை அவர்கள் கூறவில்லை என ஈரானிய மற்றும் லெபனான் தூதரகங்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.

author-image
WebDesk
New Update
JNU envoy

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்காசிய படிப்புகளுக்கான மையம் சார்பில் மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் பற்றி கருத்தரங்கு நடைபெறவிருந்தது. இதில் இந்தியாவிற்கான ஈரானிய, பாலஸ்தீனிய மற்றும் லெபனான் தூதர்கள் தனித்தனியாக உரையாற்றவிருந்தனர். இந்நிலையில் மூன்று கருத்தரங்குகள் "தவிர்க்க முடியாத சூழ்நிலை" காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Advertisment

வியாழனன்று, ஈரானிய தூதர் டாக்டர் இராஜ் எலாஹி, காலை 11 மணிக்கு "மேற்கு ஆசியாவில் சமீபத்திய வளர்ச்சிகளை ஈரான் எவ்வாறு பார்க்கிறது" என்ற தலைப்பில் கருத்தரங்கில் உரையாற்ற இருந்தார்.

ஆனால் கருத்தரங்கில் பங்கேற்க இருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு, கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளரான சிமா பைத்யா, காலை  8.09 மணியளவில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக மாணவர்களுக்கு இ-மெயில் அனுப்பினார். 

அதே மெயிலில் மற்ற 2 கருந்தரங்களும் ரத்து செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டு அனுப்பினார். அதில், நவம்பர் 7-ம் தேதி பாலஸ்தீன தூதர் அட்னான் அபு அல்-ஹைஜா உரையாற்றவிருந்த பாலஸ்தீன வன்முறை குறித்த  கருத்தரங்கு நிகழ்ச்சி மற்றும் நவம்பர் 14-ம் தேதி லெபனான் நிலைமை குறித்த லெபனான் தூதர் டாக்டர் ராபி நர்ஷால் பேசிவிருந்த நிகழச்சி என 3 நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அவர் கூறினார்.

Advertisment
Advertisements

ஈரானிய மற்றும் லெபனான் தூதரகங்களின் வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், நிகழ்வுகளை ரத்து செய்வதற்கான முடிவு பல்கலைக்கழகத்தால் எடுக்கப்பட்டதாகவும், அதற்கான காரணங்களை பல்கலைக்கழகம் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தன. பாலஸ்தீன தூதரகம் மெசேஜ், தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.

அதே போல் சிமா பைத்யாவும் இதுகுறித்து கேட்டபோது பதிலளிக்கவில்லை.

துருவமுனை பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகள் வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே எதிர்ப்பை, பிரச்சினைகளை தூண்டலாம் என்று ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் (எஸ்ஐஎஸ்) மூத்த ஆசிரியர்கள் கவலை தெரிவித்த நிலையில் நிகழ்ச்சி  ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. 

வியாழன் அன்று அனைத்து SIS மையங்களின் தலைவர்களுக்கு ஒரு தகவல் பரிமாற்றத்தில், SIS டீன் அமிதாப் மட்டூ, முந்தைய செய்தியை மீண்டும் வலியுறுத்தி ​​கூறினார்: "நாம் ஒரு பரபரப்பான உலகளாவிய சூழலில் வாழ்கிறோம், அங்கு உணர்வுகள் எளிதில் தூண்டப்படலாம். எந்தவொரு பொது நிகழ்ச்சிக்கும் எந்த ஒரு தூதரக அதிகாரியையும் பள்ளிக்கு அழைப்பதற்கு முன், டீனை நம்பும்படி உங்களைக் கோருவதற்காக இது உள்ளது. 

இந்த படிப்பிற்கு வரும் ஒவ்வொரு பார்வையாளரும், குறிப்பாக தூதுவர் மட்டத்தில், சரியான நெறிமுறையை வழங்குவதையும் நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்றார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: