/indian-express-tamil/media/media_files/2025/09/17/death-2025-09-17-11-06-49.jpg)
தமிழகத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி கேரள கான்வென்ட்டில் மரணம்: போலீஸ் சொன்ன முக்கிய தகவல்
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கான்வென்ட் ஒன்றில் 33 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த கன்னியாஸ்திரியின் பெயர் மேரி ஸ்கோலாஸ்டிகா என்றும் அவர் மதுரையைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
அதாவது, நேற்று பிற்பகல் 3 மணியளவில் கன்னியாஸ்திரி மேரி ஸ்கோலாஸ்டிகா தூக்கில் தொங்கியபடி கான்வென்ட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கான்வென்ட்டில் இருப்பவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு கன்னியாஸ்திரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார் தற்கொலை குறிப்பு ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை தான் என உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், கன்னியாஸ்திரி மேரி ஸ்கோலாஸ்டிகாவின் உறவினர்கள் அவரை பார்க்க கான்வென்ட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் தனது உறவினர்களிடம் கண்ணீர்விட்டு அழுது பேசிக் கொண்டிருந்ததாக தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய போலீசார், “கன்னியாஸ்திரி மேரி ஸ்கோலாஸ்டிகா மூன்று ஆண்டுகளாக கான்வென்ட்டில் வசித்து வந்துள்ளார். தற்கொலை குறிப்பு மற்றும் அவரது நடவடிக்கைகள் அவர் மன அழுத்ததில் இருந்ததை காட்டுகிறது. இருப்பினும் நாங்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளோம்” என்று கூறியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us