கடந்த ஆண்டு மே மாதம், ஒரு செய்தி தொலைக்காட்சி விவாதத்தின் போது, முகமது நபி குறித்து நுபுர் சர்மா கருத்து தெரிவித்த வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டியதற்காகவும், மத உணர்வுகளை அவமதித்ததற்காகவும் நுபுர் ஷர்மா மீது மும்பை மற்றும் ஹைதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செய்யப்பட்ட பா.ஜ.க-வின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு டெல்லி காவல்துறை துப்பாக்கி உரிமம் வழங்கியுள்ளது.
நுபுர் ஷர்மாவுக்கு கொலை மிரட்டல் வருவதால், சில நாட்களுக்கு முன்பு, துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கோரி விண்ணப்பித்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, அவருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம், ஒரு செய்தி தொலைக்காட்சி விவாதத்தின் போது, முகமது நபி குறித்து நுபுர் சர்மா கருத்து தெரிவித்த வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டியதற்காகவும், மத உணர்வுகளை அவமதித்ததற்காகவும் நுபுர் ஷர்மா மீது மும்பை மற்றும் ஹைதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக பா.ஜ.க-வின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் நவீன் குமார் ஜிண்டாலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர், தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தன் மீது வெறுப்புடன் குறிவைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி, டெல்லி காவல்துறையின் சைபர் செல் பிரிவில் நுபுர் ஷர்மா புகார் அளித்தார். அடுத்த நாள், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல்), 507 (அடையாளம் தெரியாத தொடர்பு மூலம் குற்றமிழைத்தல்) மற்றும் 509 (ஒரு பெண்ணை அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் சிறப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீஸ் விசாரணையின் போது, இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒரு குழுவினர் பகை / வெறுப்புணர்வை ஊக்குவிப்பதாக நுபுர் ஷர்மா மற்றொரு புகாரை பதிவு செய்தார்.
நுபுர் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு டெல்லி போலீசார் ஜூன் மாதம் பாதுகாப்பு வழங்கினர். தனக்கு பல சந்தர்ப்பங்களில் மிரட்டல்கள் வந்ததாகவும், தனது கருத்துக்களால் அவரும் அவரது குடும்பத்தினரும் துன்புறுத்தப்படுவதாகவும் நுபுர் ஷர்மா போலீசாரிடம் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷர்மாவுக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதாகவும், வன்முறைக்கு அழைப்பு விடுத்ததாகவும் பீம் சேனா அமைப்பின் தலைவர் நவாப் சத்பால் தன்வாரை டெல்லி காவல்துறை கைது செய்தது.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கோரி டெல்லி காவல்துறையின் உரிமம் வழங்கும் பிரிவில் அவர் மனு தாக்கல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக, தனக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பல கொலை மிரட்டல்கள் வந்ததாகவும், தற்காப்புக்காக தனக்கு தனிப்பட்ட முறையில் துப்பாக்கி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் வழக்கப்படி இந்தமனுவைச் சரிபார்த்து விண்ணப்பதாரரின் குற்றப் பதிவுகளைப் பார்க்கிறோம். பின்னர், அவருடைய பின்னணியைச் சரிபார்க்கிறோம். எல்லாம் முடிந்ததும், நாங்கள் அச்சுறுத்தல்களைச் சரிபார்த்து உரிமம் வழங்குகிறோம். இப்போதைக்கு, அவர் பாதுகாப்பிற்காக ஒரு துப்பாக்கியை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்” என்று ஒரு அதிகாரி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”