/tamil-ie/media/media_files/uploads/2019/09/NEET-Impersonation.jpg)
OBC MBC medical seat reservation protesters tried to burn PM Modi's effigy : பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்துவிட்டதாக கூறி பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்றுள்ளனர். புதுவை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இன்று காலை அண்ணாசாலை - காமராஜர் சாலை சந்திப்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவ இடங்களில் துரோகம் செய்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகடை பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் தி.க புதுச்சேரி மாநிலத் தலைவர் வீரமோகன், துணைத்தலைவர் இளங்கோ, செயலாளார் சுரேஷ், பொருளாளார் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் 5 பேர் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முற்பட்டனர்.
இதனைத் தொடந்து அந்த போராட்டத்தில் ஈடுபட்ட 60 நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளில் ஓ.பி.சி., எம்.பி.சி மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை உயர் சாதியினருக்கு தாரைவார்த்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
மேலும் படிக்க : கொரோனாவுக்காக மனிதரை நரபலி கொடுத்த பூசாரி; ஒடிசாவில் அதிர்ச்சி
மேலும் ஓ.பி.சி. மற்றும் எம்.பி.சி. மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய மண்டல் குழு அறிக்கையை ஒழித்துக் கட்டவே இந்த முயற்சி நடைபெறுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.