யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ மற்றும் அவர்களின் அரசியலைப் பொறுத்து சட்டம் மாறுகிறது. 2013-2018-க்கு இடையில், கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு SDPI மற்றும் PFI கிட்டத்தட்ட 1600 பேர் மீதான 176 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதில் பெரும்பாலோர் மீது தடை உத்தரவுகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அப்போது காங்கிரஸ் அரசின் நடவடிக்கைக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இப்போது கர்நாடகாவில் மாநிலத் தேர்தல் வர உள்ள நிலையில், சட்டம் மாறுபடுகிறது. கர்நாடகாவில் 2019-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டாவது முறையாக வழக்குகளை ரத்து செய்கிறது. தற்போது 34 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 341 பேரை விடுவிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் மாநிலத்திற்குள் ஆட்சேபனைகள், காவல்துறை ஆட்சேபனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது வெறுப்பு பேச்சு, வகுப்புவாத பிரச்சனைகள், போரட்டம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
34 வழக்குகளில் இதில், 16 வழக்குகள் சங்க பரிவாருடன் தொடர்புடைய இளைஞர் குழுக்களை சேர்ந்த 113 நிர்வாகிகள் உள்ளனர். இந்து ஜாகரன் வேதிகே (HJV), விஷ்வ ஹிந்து பரிஷத்தின் துணை அமைப்பு, பஜ்ரங் தளம் மற்றும் ஸ்ரீராம சேனா மீதான வழக்குகள் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதோடு 18 விவசாயிகள் மற்றும் 228 தனிநபர்கள் மீது வழக்கு ரத்து செய்யப்பட உள்ளது,
இது தொடர்பாக அக்டோபர் 1, 2022 அன்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. 34 வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு தேவையான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யுமாறு அமைச்சகம் அறிவுறுத்தியது.
செப்டம்பர் 19, 2022 அன்று அனுமதி பெறுவதற்காக மாநில அமைச்சரவை முன் வைக்கப்பட்ட ஆவணங்களின்படி, இந்த 34 வழக்குகளில் ஒவ்வொன்றையும் திரும்பப் பெறுவதற்கு மாநில காவல்துறை, வழக்குத் துறை மற்றும் சட்டத் துறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், “வாபஸ் பெறுவதற்கு ஏற்ற வழக்கு அல்ல” என்று கூறியது.
ஆய்வின் படி, இன்றுவரை 8 வழக்குகளில், அக்டோபர் உத்தரவின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
- குற்ற எண் 61/2016, குடகு: முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாக வலதுசாரி ஆர்வலர் அஜித்குமார் மற்றும் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குடகுவில் உள்ள விராஜ்பேட்டை பாஜக எம்எல்ஏ கேஜி போபையாவின் பதவி விலகல் கோரிக்கை. விடுதலை: நவம்பர் 25, 2022.
2. குற்ற எண் 170/2017, ஹலகேரி (ஹவேரி): குழந்தை மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக வகுப்புவாத பதட்டத்தின் போது பந்த் நடத்த முயன்றதாக குருராஜ் வெர்னேகர் மற்றும் 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை மாநில அரசின் மூத்த அதிகாரியிடம் இருந்து வந்தது. விடுதலை: ஜனவரி 5, 2023
3. குற்ற எண் 200/2017, பாகல்கோட்: தொழுகையின் போது மசூதிக்குள் நுழைந்து அமைதியைக் குலைத்ததாக லக்ஷ்மன் கயக்வாட் மற்றும் 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஹங்குண்ட் தொகுதி பாஜக எம்எல்ஏ தொட்டனகவுடா ஜி பாட்டீல் வாபஸ் பெற கோரிக்கை விடுத்தார். விடுதலை: நவம்பர் 4, 2022.
4. குற்ற எண் 79/2013, சுல்லியா (தட்சிண கன்னடம்): இந்து சமஜோத்சவ நிகழ்வின் போது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பேசியதாக இந்து ஜாகரன் வேதிகே தலைவர் ஜெகதீஷ் கரந்த் மற்றும் 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வாபஸ் பெறுவதற்கான கோரிக்கையை துறைமுகங்கள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகவும் உள்ள உள்ளூர் சுல்லியா எம்.எல்.ஏ.எஸ் அங்காரா விடுத்தார். விடுதலை: டிசம்பர் 9, 2022.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவை தொடர்பு கொண்டபோது, ”வலதுசாரி ஆதரவாளர்கள் மட்டுமல்ல. விவசாயிகள், மொழிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதில் பல வழக்குகள் அப்பாவி மக்கள் மீதும் தேவையில்லாமல் போடப்பட்டுள்ளன” என்று கூறினார். சட்டத் துறை அமைச்சர் ஜே. சி மது சுவாமியும் ஆகஸ்ட் 2022-ம் ஆண்டு இதே கூறினார்.
“இது அரசின் கூட்டு முடிவு” என்று உள்துறை செயலாளர் (II) எஸ். ரவி, ஐபிஎஸ் அதிகாரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/