scorecardresearch

என்.ஆர்.சி-ஐ எங்கள் மாநிலத்திலும் செயல்படுத்த மாட்டோம் – நவீன் பட்நாயக் திட்டவட்டம்

குடிமக்கள் அனைவரும் அமைதி காக்கும்படியும், தவறான தகவல்களை நம்பி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டார்.

என்.ஆர்.சி-ஐ எங்கள் மாநிலத்திலும் செயல்படுத்த மாட்டோம் – நவீன் பட்நாயக் திட்டவட்டம்
Odisha Chief Minister Naveen Patnaik opposes NRC

Manoj CG, Sampad Patnaik

Odisha Chief Minister Naveen Patnaik opposes NRC : மத்திய அரசின் நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தற்போது இந்த நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். கடந்த வாரம் இவருடைய கட்சி எம்.பிக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டங்கள்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. வெளிநாட்டினருக்கு தான் இது பாதிப்பினை அளிக்கும் என்று பிஜூ ஜனதா தளம் எம்.பி-க்கள். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கூறினர். அதே நேரத்தில் என்.ஆர்.சியை எக்காரணம் கொண்டும் ஆதரிக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்கள். குடிமக்கள் அனைவரும் அமைதி காக்கும்படியும், தவறான தகவல்களை நம்பி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டார்.

To read this article in English

பூரி தொகுதியின் எம்.பி. பினாகி மிஸ்ரா இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பேசும் போது “என்.ஆர்.சி எனப்படுவது இந்த மண்ணில் வாழும் மக்கள் இந்த நாட்டின் உண்மையான குடிமக்களா என்று கேள்வி எழுப்புகிறது. என்னுடைய சொந்த குடியுரிமையை என்னால் நிரூபிக்க முடியாது. ஏன் என்றால் என்னிடம் பிறப்பு சான்றிதழ் கிறாது” என்று அறிவித்தார். தேசிய மக்கள் தொகை பதிவேடு தான் நாடு தழுவிய குடிமக்கள் பதிவேட்டிற்கான முதல் படி. இதனை மாநில அரசு நிர்வாகிகள் செய்து முடிப்பார்கள். ஆனால் மத்திய அரசு மாநில அரசை நிர்பந்திக்க இயலாது என்றும் அவர் குறிப்பிடார்.

தொடர்ந்து உருவாகும் எதிர்ப்பலைகள்

சனிக்கிழமை என்று பாஜக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் மற்றும் பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் நாடு தழுவிய என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவருடைய எம்.பிக்கள் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களான மேற்கு வங்கம் (மம்தா பானர்ஜி), பஞ்சாப் (அம்ரிந்தர் சிங்), ராஜஸ்தான் (அசோக் கெலோத்), சத்தீஸ்கர் (பூபேஷ் பகெல்), கேரளா (பினராய் விஜயன்) ஆகியோர் ஏற்கனவே என்.ஆர்.சி மட்டும் சி.ஏ.பி. என இரண்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டனர்.

மேலும் தெலுங்கானாவின் தெலுங்கு ராஷ்ட்ர சமிதி மற்றும் டெல்லியின் ஆம் ஆத்மி கட்சிகளும் நாடு தழுவிய என்.ஆர்.சியை எதிர்த்து விமர்சனங்களை முன் வைத்தனர். மேலும் இவ்விரு கட்சிகளும் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். தெலுங்கு ராஷ்ட்ர சமிதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கே.கேசவா பேசுகையில் இந்த திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கிறது.

மேலும் இது என்.ஆர்.சியுடன் சேர்த்து தான் பார்க்கப்படும். இரண்டையும் தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. அசாமில் ஏன் இது பதட்டமான சூழலை உருவாக்கியது. ஏன் என்றால் இது சில மக்களை மட்டும் இந்திய குடிமக்களாக ஏற்றுக் கொள்ளும், சில மக்களை இந்திய குடிமக்களாக ஏற்றுக் கொள்ளாது. சட்டத்திற்கு புறம்பாக வரும் இந்துக்களுக்கு இந்தியாவில் உரிமை உண்டு. ஆனால் சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் வெளியில் அனுப்பப்படுவார்கள். இது ஒரு வகையான தீண்டாமை என்று குறிப்பிட்டிருந்தார்.

பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், புதுவை, மேற்கு வங்கம், ஒடிசா, பிகார், கேரளா, மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த நாடு தழுவிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் இது 42.8% ஆகும். புவியியல் அளவில் இது சுமார் 40.43% ஆகும். 2011 சென்செஸ் படி பார்த்தால் 51 கோடியே 82 லட்சத்தி 59 ஆயிரத்தி 196 மக்களை பெற்றிருக்கும் மாநிலங்கள் ஆகும்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Odisha chief minister naveen patnaik opposes nrc