Advertisment

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மரணம்

ஒடிசா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்தார். அவர் மேல்சிகிச்சைக்காக பிரஜ்ராஜ்நகரில் இருந்து தலைநகர் புவனெஷ்வருக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

author-image
WebDesk
New Update
naba kisore das, odisha, odisha minister shot, bjd, ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் மீது போலீஸ் அதிகாரி துப்பாக்கிச்சூடு, நபா கிஷோர் தாஸ், ஒடிசா, biju janata dal, brajrajnagar, jharsuguda, Tamil indian express news

ஒடிசா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான நபா கிஷோர் தாஸ் மீது காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்தார். அவர் மேல்சிகிச்சைக்காக பிரஜ்ராஜ்நகரில் இருந்து தலைநகர் புவனெஷ்வருக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டார். இந்தநிலையில், நபா தாஸ் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

Advertisment

பிஜு ஜனத தளம் கட்சியின் மூத்த தலைவரும், ஒடிசா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான நபா கிஷோர் தாஸ், ஞாயிற்றுக்கிழமை ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜ்ராஜ்நகரில் காவல்துறை அதிகாரியால் சுடப்பட்டதில் அவரது மார்பில் காயம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய ஏ.எ.ஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளர். துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டது. இந்தநிலையில், நபா தாஸ் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் நபா கிஷோர் தாஸ் தனது வாகனத்தை விட்டு இறங்கும்போது குறைந்தது 4 முதல் 5 சுற்று தோட்டாக்கள் அவர் மீது சுடப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த நபா கிஷோர் தாஸ் கீழே சரிந்து விழுந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில், உள்ளூர் இளைஞர் ஒருவரும் போலீஸ் அதிகாரி ஒருவரும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயம் அடைந்துள்ளனர்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சுகாதாரத்துறை அமைச்சர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். “நபா கிஷோர் தாஸ் மீதான துரதிர்ஷ்டவசமான இந்த தாக்குதலால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். அவர் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” விசாரணையை மேற்கொள்ள குற்றப்பிரிவு மூத்த அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறு முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டார்.

2009-ம் ஆண்டு முதல் ஜார்சுகுடா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வரும் நபா கிஷோர் தாஸ், ஜார்சுகுடாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே சிறப்பு மருத்துவர்கள் குழு அமைச்சருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் புவனேஷ்வர் கொண்டு செல்லப்பட்டார்.

பிரஜ்ராஜ்நகரில் உள்ள காந்தி சௌக்கில், அமைச்சர் நபா கிஷோர் தாஸ் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றபோது, அந்த போலீஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். காந்தி சௌக் போலீஸ் அவுட்போஸ்ட்டில் பணியமர்த்தப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ஏ.எஸ்.ஐ) கோபால் தாஸ், அமைச்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி (பிராஜ்ராஜ்நகர்) குப்தேஸ்வர் போய் தெரிவித்தார். இருப்பினும், அவர் அமைச்சரை துப்பாக்கியால் சுட்டதற்கு காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

பிராஜ்ராஜ்நகர் சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி குப்தேஸ்வர் போய் கூறுகையில், “துப்பாக்கிச்சூடு நடத்திய ஏ.எஸ்.ஐ-யை காவலில் எடுத்துள்ளோம். தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில், போலீஸ் அதிகாரி ஏன் அத்தகைய நடவடிக்கையை எடுத்தார் என்பதற்கான சரியான காரணத்தை என்னால் சொல்ல முடியவில்லை” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து நபா கிஷோர் தாஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. ஜார்சுகுடாவிலிருந்து மூன்று முறை எம்.எல்.ஏ-வாக உள்ள நபா கிஷோர் தாஸ், சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, ஜனவரி 2019-ல் காங்கிரஸில் இருந்து பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார்.

முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அமைச்சரவையில் உள்ள பணக்கார அமைச்சர்களில் ஒருவரான சுகாதார அமைச்சர், டிசம்பர் 31, 2021-ல் தனது வருடாந்திர சொத்து அறிவிப்பின்படி, தனது மனைவி பெயரில் உள்ளவை உட்பட மொத்தம் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக அறிவித்துள்ளார். நபா கிஷோர் தாஸ் தனது அறிக்கையில, அவரது குடும்ப உறுப்பினர்கள் 80 வாகனங்களை (பெரும்பாலும் வணிக ரீதியாக) வைத்திருப்பதாகவும், அவர் ஒரு ரிவால்வர், இரட்டை குழல் துப்பாக்கி மற்றும் ஒரு துப்பாக்கியை வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Odisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment