New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-2019-06-28T151250.028.jpg)
odisha, tiktok, nurses, video, neonatal ward, government hospital, ஒடிசா, டிக்டாக், நர்ஸ், வீடியோ, அரசு மருத்துவமனை, குழந்தைகள் நல வார்டு
ஒடிசா அரசு மருத்துவமனையின் குழந்தைகள் சிறப்பு வார்டில், நர்ஸ்கள் நடனம் ஆடியும், பாட்டு பாடியும் வெளியிட்ட டிக்டாக் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் மல்கான்கிரியில் குழந்தைகள் இறப்புவிகிதம் அதிகரித்ததை தொடர்ந்து, அங்குள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிறப்பு நல வார்டு சமீபத்தில் துவங்கப்பட்டது. இந்த வார்டில் பணிபுரியும் நர்ஸ்கள், நோயாளிகளின் பின்னணியில், யூனிபார்மிலேயே, நடனம் ஆடியும் பாட்டு பாடியும், விளையாடி மகிழ்வது போன்றும் டிக்டாக் வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ, சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மல்கான்கிரி மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் துரதிர்ஷ்டவசமாவனது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த டிக்டாக் வீடியோ தொடர்பாக, அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட கூடுதல் மருத்துவ அலுவலரும் மற்றும் அந்த அரசு மருத்துவமனையின் பொறுப்பாளருமான தபன் குமார் திண்டா, அவர்களிடம் விசாரணை நடத்தி, விசாரணையின் அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.