Advertisment

ஒடிசா ஐ.டி. ரெய்டு- காங்கிரஸ் எம்.பி. தொடர்புடைய நிறுவனத்தில் ரூ.350 கோடிக்கு மேல் பணம் பறிமுதல்

பாட்னாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதன் இந்தியா கூட்டணி, பணம் பறிமுதல் குறித்து மௌனம் காத்ததற்காக கடுமையாக சாடினார்.

author-image
WebDesk
New Update
Odisha IT Raid

Odisha IT Raid

ஒடிசாவில் பல்டியோ சாஹு அன்ட் குரூப் ஆஃப் கம்பெனிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட மொத்த பணம் ரூ.350 கோடியைத் தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisment

இந்த மதுபான தொழிற்சாலை ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி தீரஜ் சாஹுவின் குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது.

ஒரே ஆபரேஷனில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பணம் கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறை, என்று ஐ-டி துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி 5 நாட்கள் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் பலங்கிர், சம்பல்பூர் மற்றும் திட்லாகர் ஆகிய மூன்று எஸ்.பி.. கிளைகளுக்கு எண்ணுவதற்காக பைகளில் எடுத்துச் செல்லப்பட்டது.

அதிகபட்சமாக 176 பணம் நிரப்பப்பட்ட பைகள் எஸ்.பி..யின் பலங்கிர் கிளைக்கு எடுத்துச் செல்லப்பட்டது, அங்கு நோட்டுகளை எண்ணுவதற்கு கூடுதல் ஆள்களை ஈடுபடுத்த வேண்டியிருந்தது.

ஐ-டி துறையால் கைப்பற்றப்பட்ட நோட்டுகளை எண்ணும் பணி ஐந்து நாட்களுக்குப் பிறகு நிறைவடைந்துள்ளது. மொத்தம் 25 இயந்திரங்களும் 50 வங்கி அதிகாரிகளும் வார இறுதியில் கூட இதற்காக கூடுதல் மணிநேரம் உழைத்தனர். மொத்தத் தொகை ரூ. 305 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, என்று எஸ்பிஐ மூத்த அதிகாரி ஒருவர் பலங்கிர் கிளையில் எண்ணப்பட்ட பணம் தொடர்பான விவரங்களை தெரிவித்தார்.

மேலும், சம்பல்பூர் கிளையில் கணக்கிடப்பட்ட தொகை சுமார் 37.50 கோடி ரூபாயாகவும், டிட்லாகர் கிளையில் 11 கோடி ரூபாயாகவும் இருக்கும் என எஸ்பிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 6-ம் தேதி முதல் மூன்று கிளைகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்ட பணம், திங்கள்கிழமை ஐ-டி துறை பரிந்துரைத்த கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கணக்கிடப்படாத பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிய  ஐடி அதிகாரிகள் மதுபான உற்பத்தி பிரிவின் இரண்டு ஊழியர்களை விசாரித்து வருகின்றனர். அவர்களின் அறிக்கையின் அடிப்படையில், நிறுவனம் அடுத்த நடவடிக்கை எடுக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஹைதராபாத் மற்றும் புவனேஸ்வரை சேர்ந்த மூத்த ஐடி அதிகாரிகள் பலங்கிரில் முகாமிட்டு விசாரணையை கண்காணித்து வருகின்றனர்.

பாட்னாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதன் இந்தியா கூட்டணி, பணம் பறிமுதல் குறித்து மௌனம் காத்ததற்காக கடுமையாக சாடினார்.

சுதந்திரம் பெற்றதில் இருந்து, எம்.பி. வீட்டில் இருந்து இவ்வளவு பெரிய தொகையை கைப்பற்றியதில்லை, என்று அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது, ஆனால் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் இதில் அமைதியாக இருக்கிறது. காங்கிரஸின் இயல்பிலேயே ஊழல் இருப்பதால் அவர்களின் மௌனம் எங்களுக்குப் புரிகிறது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ், ஒருங்கிணைந்த ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், திமுக, சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் அமைதியாக உள்ளன.

ஜென்சிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஏன் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. தங்கள் ஊழலின் ரகசியங்கள் அனைத்தும் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம் அவர்கள் மனதில் இருந்ததால்தான் இப்படி பேசுகின்றனர்.

இவ்வளவு பெரிய பணம் கைப்பற்றப்பட்டது குறித்த கேள்விகளுக்கு ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பதிலளிக்க வேண்டும். பாஜக இதனை அடிமட்டத்துக்கு எடுத்துச் சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். 2014ஆம் ஆண்டு முதல் ஊழலுக்கு எதிராக எங்களது போராட்டம் நடைபெற்று வருகிறது. ஊழலைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார், என்று அமித்ஷா கூறினார்.

மதுபான வியாபாரிகளிடம் இருந்து பினாமி தொகையை கைப்பற்றியதற்காக பிஜு ஜனதா தளம்அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய தர்ணா நடத்த பாஜகவின் ஒடிசா பிரிவு முடிவு செய்துள்ளது.

சாஹு நிறுவனம் 1994-95 முதல் ஒடிசாவில் நாட்டு மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது, , மேலும் ஒவ்வொரு ஆண்டும் அதை புதுப்பித்து அதன் செயல்பாடுகளைத் தொடர்கிறது.

Read in English; Odisha I-T searches: Cash haul at firm linked to Congress MP Baldeo over Rs 350 crore as counting ends

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Odisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment