கொல்கத்தாவின் ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (ஜுன் 2) சென்னை நோக்கி வந்த போது இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது. ரயில் தடம்புரண்டு மற்றொரு தண்டவாளத்தில் விழுந்த நிலையில் பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்ற ரயில், தடம்புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தேசிய மற்றும் மாநில மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். விடிய விடிய மீட்பு பணிகள் நடைபெற்து வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி நடைபெறுகிறது. இந்த கோர சம்பவத்தில் 238க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்றும் 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த போது, பெங்களூரில் இருந்து ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. தென் மேற்கு ரயில்வே (SWR) அறிக்கையின் படி, 994 முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளும், சுமார் 300 முன்பதிவு செய்யப்படாத பயணிகளும் சர். எம் விஸ்வேஸ்வரய்யா நிலையத்திற்கு பின் ஏறியுள்ளனர்.
SMVT யில் இருந்து புறப்பட்ட ரயிலின் 2 GS பெட்டிகள் மற்றும் பிரேக் வேன் தடம் புரண்டது தெரிய வந்தது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இருப்பதால், பயணிகளை அடையாளம் கண்டறியவதில் சிறிது கால தாமதம் ஆகிறது என்றார். தொடர்ந்து, தங்களுக்கு பல அழைப்புகள் வருவதாகவும், ரயில் பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்வதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ரயில் விபத்து தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒடிசா முதல்வருடன் தொலைபேசியில் அழைத்து பேசினர். தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையிலான குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒடிசா சென்றடைந்தது.
சிவசங்கர் கூறுகையில், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள் ஒடிசா அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். தேவையான உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
அதேபோல் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் பிரத்யேக ஹெல்ப்லைன் டெஸ்க் அமைக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“