Advertisment

ஒடிசா ரயில் விபத்து: பிணவறையாக மாறிய பள்ளி; இறந்தவர்களை அடையாளம் காண்பதில் கடும் சிக்கல்

விபத்தில் உயரிழந்தவர்களின் உடல் சிதைந்தும், கருகியும் இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Odisha train tragedy:

Odisha train tragedy

ஒடிசா ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் முடிவடைந்து வரும் நிலையில் தற்போது கவனம் இறந்தவர்களின் பக்கம் திரும்பியுள்ளது. அவர்களை அடையாளம் காண்பது எவ்வாறு என்று கேள்வி எழுந்துள்ளது. அடையாளம் தெரியாத உடல்களை தடயவியல் சோதனை செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Advertisment

உடல்களை வைக்க ஏன் பள்ளி தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த அதிகாரிகள், விபத்து நடந்த இடத்தில் இருந்து பள்ளி அருகில் உள்ளது. அதோடு அங்குள்ள வகுப்பறைகள் மற்றும் அரங்குகள் போதுமான இடைவெளியை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

இங்கு சுமார் 163 உடல்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் 30 உடல்கள் மட்டுமே இதுவரை உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் இயக்குனர் அரவிந்த் அகர்வால் தெரிவித்தார். அவர் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

டி.எஸ்.பி ரனாஜித் நாயக் கூறுகையில், "இது ஒரு அவசர நிலை. உயிரிழப்புகள் அதிகம் உள்ளன, ஆனால் பல உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளன. உறவினர்கள் உடைந்து போய் உள்ளனர். நாங்கள் அவர்களை கவனமாகக் கையாளுகிறோம்" என்றார்.

பள்ளியில் நகராட்சி ஊழியர்கள் உட்பட 100 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். பாசுதேவ்பூர் நகராட்சி ஊழியர் ராஜேந்திரா கூறுகையில், "சிதைந்த உடல்களை எடுப்பது கடினமான வேலை. உறவினர்களின் வலியை எங்களால் விவரிக்க முடியவில்லை. ரயில் மின்சாரம் தாக்கியதில் உடல்கள் சிதைந்து கருவி உள்ளன. அதனால் அவர்களை அடையாளம் காண்பதில் கடும் சவால்" என்று கூறினார்.

பள்ளியில் போதுமான அளவு மாஸ்க் மற்றும் சானிடைசர்கள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளியில் கூடியிருந்த குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதிகாரிகள் கூறுகையில், "உறவினர்கள் ஒரு உடலை அடையாளம் கண்டவுடன், அவர்கள் குடியிருப்பு சான்று மற்றும் ரயில் டிக்கெட் விவரங்கள் கொடுக்கப் படவேண்டும். அடையாளம் காணப்பட்ட நபர்களின் பெயர்கள் முன்பதிவு விவரங்களுடன் கொடுக்கப்படுகின்றன. அதன்பிறகுதான் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இழப்பீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும்" என்றார்.

பல உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதால், அடையாளம் காண ஏதுவாக அவர்களின் பொருட்கள், தொலைபேசிகள் மற்றும் பிற பொருட்களைத் தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு மிட்னாபூரைச் சேர்ந்த சசாத் அலியின் உறவினர் ஷாலிமாரிலிருந்து சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்றதாக கூறினார். சசாத் அலி தனது உறவினரின் நிலை குறித்து அறிய பள்ளிக்கு வந்தார். சசாத் அலி கூறுகையில், எனது உறவினர் தச்சராக வேலை செய்கிறார். என்னால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை, அவருடைய போன் ஆஃப் ஆகிவிட்டது என்றார்.

பள்ளியில் நின்ற உறவினர்களின் வலி வார்த்தைகளால் விவரிக்க முடியாதபடி இருந்தது. பள்ளியிலும் அருகில் உள்ள சுகாதார நிலையங்களிலும் தங்கள் உறவினர்களை காண போராடினர். சோரோ மருத்துவமனையில், மேற்கு வங்காளத்தில் உள்ள டயமண்ட் ஹார்பரைச் சேர்ந்த சையத் அலி, விசாகப்பட்டினத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸில் ஏறிய தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 6 பேரைத் தேடினார். விசாகப்பட்டினத்தில் அவர்கள் கட்டுமானத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்ததாக கூறினார். சையத் கூறுகையில், "மருத்துவமனைகள் உட்பட எல்லா இடங்களிலும் நாங்கள் விசாரித்தோம், ஆனால் அவர்களைப் பற்றிய தகவல் இல்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா? என்று கூட தெரியவில்லை" என்றார்.

பைஷ்னாப்நகரில் வசிக்கும் சோதுராம் சௌத்ரி என்பவர் வேலைக்காக சென்னைக்கு சென்று கொண்டிருந்த தனது உறவினர்கள் இந்த ரயில் விபத்தில் சிக்கியதாக கூறினார். சாது சௌத்ரி மற்றும் திபாங்கர் மொண்டோல் ஆகியோர் ரயில் சென்றனர். அவர்களை நான் இங்கு தேடி வருகிறோன் என்றார். தொடர்ந்து அவர் கூறுகையில், உடல்கள் வெப்பத்தில் அழுக ஆரம்பித்துவிட்டன. பல முகங்கள் அடையாளம் முடியவில்லை என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Odisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment