திருப்பூருக்கு வேலைக்கு வந்த ஒடிசாவைச் சேர்ந்த பெண்ணை, அவருடைய கணவரின் கண் முன்னே 3 வட மாநில இளைஞர்கள் கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
பீகாரைச் சேர்ந்த ஒரு மைனர் உட்பட மூன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், குடும்பத்திற்கு வேலை தேட உதவுவதாக உறுதியளித்து, பின்னர் கணவரைத் தாக்கி, வாடகை அறையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் திருப்பூர் நகரில், பீகாரைச் சேர்ந்த ஒரு மைனர் உட்பட 3 புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் ஒடிசாவைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், அவரது கணவர் முன்னிலையில் கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் கூறுகையில், திங்கட்கிழமை இரவு அந்தப் பெண், அவரது கணவர் மற்றும் அவர்களது 3 வயது குழந்தையுடன் வேலை தேடி திருப்பூருக்கு வந்த பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிறிது நேரம் திருப்பூர் நகரத்தில் சுற்றித் திரிந்த பிறகு, என்ன செய்வது என்று தெரியாமல், அந்த குடும்பத்தினர் ஒரு திரையரங்கப் பகுதிக்கு அருகில் இருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களை அணுகியதாக போலீசார் தெரிவித்தனர்.
பீகாரைச் சேர்ந்த முகமது நதிம் (24), முகமது டேனிஷ் (25) மற்றும் 17 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள், வேலை வாய்ப்புகளைக் கண்டறிய குடும்பத்தினருக்கு உதவுவதாக ஒரு விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் ஒரு வாடகை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரவு தங்க இடம் வழங்கினர்.
“இரவு உணவுக்குப் பிறகு, அந்த குடும்பத்தினர் ஓய்வெடுக்கும்போது, ஆண்கள் கணவரைத் தாக்கி, அவரைக் கட்டிவைத்து, கத்தியைக் காட்டி மிரட்டி, பின்னர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்” என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
“இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்ய வேண்டாம் என்று தம்பதியரைத் தாக்கியவர்கள் எச்சரித்தனர், புகாரளித்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர், அன்றிரவே அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்” என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
சில மணி நேரம் கழித்து அந்த தம்பதியினர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
முகமது நதிம் மற்றும் முகமது டேனிஷ் ஆகியோர் கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்,.அதே நேரத்தில் கைது செய்யப்பட்ட சிறுவன் கோவை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
இந்த சம்பத்தில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் தற்போது திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.