புதுவையில் ரூ.5 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரிக்க முயற்சி; தி.மு.க முன்னாள் அமைச்சர் மீது முதியவர் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை தி.மு.க முன்னாள் அமைச்சர் அபகரிக்கும் முயற்சியில் தன்னை மிரட்டுவதாக பிரெஞ்சு குடியுரிமை பெற்ற முதியவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்

புதுச்சேரியில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை தி.மு.க முன்னாள் அமைச்சர் அபகரிக்கும் முயற்சியில் தன்னை மிரட்டுவதாக பிரெஞ்சு குடியுரிமை பெற்ற முதியவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்

author-image
WebDesk
New Update
oldman

கடையை காலி செய்யாமல் தி.மு.க முன்னாள் அமைச்சர் இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் தன்னை மிரட்டினார் என்று இடத்தின் உரிமையாளரான மூர்த்தி பால்ராஜ் தெரிவித்தார்.

புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி பால்ராஜ் 75 வயதான இவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர், இவருக்கு சொந்தமான 2200 சதுர அடி இடம் புதுச்சேரி கொசக்கடை வீதியில் கடையுடன் உள்ளது.

Advertisment

இந்த இடத்தில் புதுச்சேரி திமுக முன்னால் அமைச்சரும் தற்போது தி.மு.க-வின் மாநில அவை தலைவருமான எஸ்.பி.சிவகுமார், 15 ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக்கு நகைக்கடை நடத்தி வருகிறார்.

மூர்த்தி பால்ராஜின் மனைவி இறந்த நிலையில் தனது மகன்களுக்கு சொத்தை பிரித்து கொடுப்பதற்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சிவகுமாரிடம் கடையை காலி செய்து கொடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.

ஆனால், கடையை காலி செய்யாமல் தி.மு.க முன்னாள் அமைச்சர் இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் தன்னை மிரட்டினார் என்று இடத்தின் உரிமையாளரான மூர்த்தி பால்ராஜ் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

தி.மு.க முன்னாள் அமைச்சரின் மிரட்டலால், அதிர்ச்சி அடைந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மூர்த்தி பால்ராஜ், “தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி சிவகுமார் தனது இடத்தில் வாடகைக்கு இருந்து கொண்டு இடத்தை காலி செய்யாமல் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அபகரிக்கும் முயற்சியோடு அரசியல் பின்புலத்தோடு தன்னை மிரட்டுவதாகவும், காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் தன்னை அலைக்கழிப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி சிவக்குமாரிடம் இருந்து தனது இடத்தை மீட்டு கொடுக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: