ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் புதிய புகைப்படம் டுவிட்டரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு திருத்தப்பட்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில், அவர் சாம்பல்நிற வெள்ளை தாடியுடன் விளையாடுகிற புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் பற்றி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், ஒமர் அப்துல்லா தடுப்புக்காவலில் அடைத்துவைக்கப்பட்டபோது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்த சிலர், தற்போது இதில் அவரது புதிய தோற்றத்தைப் பார்த்துப் வரவேற்பு தெரிவித்து அவரை பாராட்டியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பயனர்கள் பலரும் ஒமர் அப்துல்லாவின் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து வௌர்கின்றனர். இருப்பினும் பஇருப்பினும், இந்த புகைப்படத்தை தனிப்பட்ட முறையில் அவருடையதுதானா என்று சரிபார்க்க முடியவில்லை.
ஜனவரி 15-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கை பார்வையிடுவதற்கு வருகை தரும் மத்தியிலிருந்து அமைச்சரவைப் பிரதிதிகள் குழுவினரை தங்கவைப்பதற்கு ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் திட்டமிட்டதால், ஒமர் அப்துல்லா ஹரி நிவாஸிலிருந்து அவருடைய அலுவல் இல்லத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு மாற்றப்பட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு அரசியலமைப்பின் 370 வது பிரிவை திருத்திய பின், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. அதன் பின்னர், அம்மாநிலத்தில், நூற்றுக்கணக்கான அரசியல், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வணிகர்கள் ஆகியோரை தடுப்புக்காவலில் வைத்தது. அவர்களுடன் ஒமர் அப்துல்லா, அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா மற்றும் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி ஆகியோரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி மற்றும் பிற அரசியல்வாதிகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 107 வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். இது எந்தவொரு நபரும் மீறலில் ஈடுபட வாய்ப்புள்ளது மற்றும் அமைதி அல்லது பொது அமைதியைத் குலைக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் கிடைத்தால் அவர்களை தடுப்புக் காவலில் வைக்க அதிகாரிகள் மற்றும் நிர்வாக நீதிபதியை அனுமதிக்கிறது.