நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் என் கே அரோராவின் கூற்றுப்படி, இந்தியா ஏற்கனவே கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலையைக் கண்டுள்ளது.
“மெட்ரோ நகரங்களில், கடந்த ஆண்டு டிசம்பரில் ஒமிக்ரானின் பாதிப்புகள் கண்டறியப்பட்டபோது, மரபணு அமைப்பிற்காக கொரோனா நோயாளிகளின் தனிமைப்படுத்தலை வரிசைப்படுத்தினோம்.
கடந்த வாரம், டெல்லியில் 84 சதவீத பாதிப்புகள் ஒமிக்ரான் வகையைச் சேர்ந்தவை. இதேபோல், மற்ற இடங்களில், 60-75 சதவீத தனிமைப்படுத்தல்கள் ஒமிக்ரான் வகையைச் சேர்ந்தவை. நாட்டில் ஒட்டுமொத்தமாக, கடந்த வாரம் இது 28 சதவீதமாக இருந்தது, அது தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது,” என்று மருத்துவர் அரோரா, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, தற்போது 1.71 லட்சமாக உள்ளது மற்றும் வாராந்திர நேர்மறை விகிதம் 2.05% ஆக உள்ளது.
செவ்வாயன்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SARS-CoV2 வைரஸின், ஒமிக்ரான் மாறுபாட்டின் மொத்தம் 1,892 பாதிப்புகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
இந்த மாறுபாட்டின் அதிக பரவும் தன்மையைக் கருத்தில் கொண்டு, கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கையிருப்பு பற்றாக்குறையைத் தவிர்க்க, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், டெஸ்ட் ரீஜென்ட்கள் மற்றும் கருவிகள் (ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்ஸ் இரண்டும்) போன்ற தளவாடப் பொருட்களை வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
ஒமிக்ரான், இரண்டு துணைப் பரம்பரைகளைக் கொண்டுள்ளது - 70 சதவீதம் ‘எஸ் ஜீன்’ கைவிடப்பட்டதால் எடுக்கப்படுகிறது, மீதமுள்ளவை எடுக்கப்படவில்லை.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஆர்டி-பிசிஆர் சோதனைகள் கொரோனா இருப்பதை உறுதிப்படுத்தும் அதே வேளையில், ஒமிக்ரான்’ மாறுபாடு மரபணு வரிசைமுறை மற்றும் S-மரபணு இலக்கு தோல்வி மூலம் அடையாளம் காணப்படுகிறது.
காணாமல் போன S ஜீன் மாறுபாட்டிற்கான ஒரு குறிகாட்டியாகும். எனவே கண்காணிப்பு உத்திகள் முக்கியம் என்று மருத்துவர் அரோரா கூறினார்.
“ஒமிக்ரான்’ டெல்டாவை விட பல மடங்கு வேகமாகவும் பரவுகிறது. எனவே இனிவரும் காலத்தில், படிப்படியாக, ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரிக்கும். அதனால், ஒவ்வொரு கொரோனா நோயாளிக்கும் மரபணு வரிசைமுறை தேவைப்படாமல் இருக்கலாம்,” என்று அரோரா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“