மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இருந்து இரண்டு உறுதிப்படுத்தப்படாத பாதிப்புகள் பதிவாகிய சில வாரங்களுக்குப் பிறகு, ஒமிக்ரானின்’ XE துணை மாறுபாடு, இந்திய SARS-CoV2 ஜெனோமிக்ஸ் சீக்வென்சிங் கன்சார்டியத்தால் (INSACOG) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட தேசிய சோதனை ஆய்வகங்களின் வலையமைப்பு ஆகும்.
XE துணை மாறுபாட்டிலிருந்து வரும் கொரோனா தொற்று மற்ற ஒமிக்ரான் துணைப் பரம்பரைகளால் ஏற்படும் தொற்றுகளிலிருந்து வேறுபட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜனவரி மாதத்தில் நாட்டில் 3வது கொரோனா அலையைத் தூண்டிய ஒமிக்ரானின் தற்போது ஆதிக்கம் செலுத்தும் BA.2 மாறுபாட்டை விட, புதிய துணை மாறுபாடு சுமார் 10 சதவீதம் மட்டுமே பரவக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.
XE மாதிரி எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
ஆனால் இரு மாநிலங்களில் இருந்து உறுதிப்படுத்தப்படாத இரண்டு பாதிப்புகளில், மகாராஷ்டிராவில் இருந்து வந்த மாதிரி’ புதிய துணை மாறுபாட்டின் மாதிரி இல்லை. கிளஸ்டர் உருவாக்கம் எதுவும் காணப்படவில்லை, ”என்று ஒரு அரசாங்க அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
12 மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நேரத்தில், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் INSACOG புல்லட்டின் படி, XE உறுதிப்படுத்தல், மீண்டும் முகமூடி உத்தரவுக்கு வழிவகுத்துள்ளது. இதற்கிடையில், ஏப்ரல் 25 வரையிலான அரசாங்க தரவுகளின்படி, மற்ற 19 மாநிலங்களிலும் பாதிப்புகள் குறைந்துள்ளன.
இன்சகோக் புல்லட்டின் "ஒமிக்ரான் (BA.2) இந்தியாவில் இன்றுவரை ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடு" என்று கூறுகிறது.
XE மாறுபாடு ஒரு "மறுசீரமைப்பு மாறுபாடு" ஆகும். இதன் பொருள் இது ஒமிக்ரானின் BA.1 மற்றும் BA.2 வகைகளில் காணப்படும் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, இது ஜனவரி மாதம் UK இல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
வைரஸ்கள் மற்றும் பிற உயிரினங்களில்’ மரபணு மாற்றங்களின் சீரற்ற செயல்முறை' ஒரு பொதுவான நிகழ்வு ஆகும். இந்த பிறழ்வுகளில் ஒரு சிறிய பகுதி மட்டுமே வைரஸின் தொற்று அல்லது கடுமையான நோய்களை ஏற்படுத்தும் திறன்களை கணிசமாக மாற்றுகிறது.
இன்சகோக் புல்லட்டின்’ BA துணை மாறுபாட்டின் குறைந்தபட்சம் இரண்டு துணை வரிசைகளை உறுதிப்படுத்தியது - BA2.10 மற்றும் BA2.12. இந்த துணை வகைகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் முதலில் பதிவாகின.
ஆனால் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. இது "வைரஸில் உள்ள அனைத்து மாற்றங்களையும் பதிவு செய்ய மூலக்கூறு தொற்றுநோயியல் நிபுணர்களுக்கு ஒரு வேடிக்கையான பயிற்சியாகும். ஆனால் இது வேகமாக பரவுவதையோ, வேறுபட்ட மக்களை பாதிக்கிறதா அல்லது கடுமையான நோயை ஏற்படுத்துவதையோ நாம் காணாத வரையில் இதற்கு முக்கியத்துவம் இல்லை" என்று அந்த அதிகாரி கூறினார்.
டெல்லி உட்பட சில பிராந்தியங்களில் பாதிப்புகளின் புதிய அதிகரிப்பு குறித்து கேட்டதற்கு, ஆய்வக ஆய்வாளர் இது "டெல்டா அல்லது ஓமிக்ரான் அலைகளின் போது காணப்படுவது போல் கூர்மையாக இல்லை" என்று சுட்டிக்காட்டினார்.
"இப்போது தொற்று மற்ற சுவாச நோய்த்தொற்றுகளின் பாதையைப் பின்பற்றுகிறது - பருவங்கள் மாறும் போது அவை அதிகரிக்கும்" என்று ஆய்வாளர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.