கர்நாடகாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசாங்கம், பாரதிய ஜனதாவின் 2019-23ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்ததாக கூறப்படும் பிட்காயின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவுக்கு குற்ற புலனாய்வு கூடுதல் இயக்குனர் மணீஷ் கார்பிகார் தலைமை தாங்குகிறார். மேலும் இந்த குழுவில் சைபர் கிரைம் மற்றும் பிட்காயின் முதலீடு குற்றங்களின் வல்லுநர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர் எனத் திங்கள்கிழமை (ஜூலை 3) மாநில உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் பிட்காயின் ஊழல் நடைபெற்றது. ஆனால் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துவோம் என மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம்.
அதனடிப்படையில் சிறப்பு விசாரணை குழுமை அமைத்துள்ளோம். மேலும் இந்தப் பிட்காயின் ஊழலில் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா உள்பட சில தலைவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்” என்றனர்.
இந்தப் பிட்காயின் ஊழல் 2020ஆம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ண ரமேஷ் என்ற ஹேக்கரால் வெளிவந்தது. இவர் 2020ஆம் ஆண்டு நவம்பர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் தூசிதட்டியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“