இன்றைய கூகுள் டூடுல் வடிவமைப்பு யாருக்கானது?

கட்டுமான துறை மட்டுமல்லாமல் இந்தியாவின் வளர்ச்சிக்கு இவர் அளித்த பங்களிப்பு அபரிதமானது

விசுவேசுவரய்யா பிறந்த நாள் : இன்று இந்தியாவில் பொறியாளர்கள் தினம். அந்த தினத்திற்கு காரணகர்த்தாவாக இருப்பவர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா அவரின் பிறந்த தினம் இன்று. பொறியியல் மற்றும் இந்திய கட்டுமானத் துறைக்கு விசுவேசுவரய்யா அளித்த பங்களிப்பின் பிரதி பலனாக இந்நாள் சிறப்பிக்கப்படுகிறது.

இவரின் சாதனைகளை நினைவு கூறும் விதமாக கூகுள் டூடுளில் அவருடைய புகைப்படத்தினை வைத்து கௌரவித்திருக்கிறது கூகுள் நிறுவனம்.

யாரிந்த விசுவேசுவரய்யா ?

1861ல் செப்டம்பர் மாதம் 15ம் தேதி கர்நாடகாவில் இருக்கும் முட்டென்னஹல்லியில் பிறந்தவர் . இன்று அவருடைய 157வது பிறந்த தினம் ஆகும். பாரத் ரத்னா விருது வாங்கிய அவர் பொறியியல் துறைக்கு செய்த அளப்பரிய சாதனைகளின் காரணமாக பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

இளங்கலை கல்வியை சென்னை பல்கலைக்கழகத்திலும் சிவில் எஞ்சினியரிங் பாடப்பிரிவை புனே அறிவியல் கல்லூரியிலும் கற்றார்.

Read more – To read this story in English

பாசன அமைப்புத் திட்டத்தில் பணியாற்றிய அவர் புனேவில் இருக்கும் கடக்வஸ்ல நீர்தேக்கத்தில் தானியங்கி மதகுகளை பொருத்தி அதற்காக காப்புரிமம் பெற்றார்.

இந்த தானியங்கி மதகுகள் பின்னர் குவாலியர் திக்ரா நீர் தேக்கத்திலும் மைசூரில் இருக்கும் கிருஷ்ணராஜ சாகர் நீர் தேக்கத்திலும் பொருத்தப்பட்டது. பின்னர் பொதுப்பணித்துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

மைசூர் திவானாக பதவி

1915ம் ஆண்டு மைசூரின் திவானாக பதவி வகித்தார். அப்போது அவர் செய்த பணிகளைப் பாராட்டி நைட் கமாண்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தனர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். 1955ம் ஆண்டு அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்திய அறிவியல் கழகத்தின் ஃபெல்லோஷிப் இவருக்கு வழங்கப்பட்டது. லண்டனில் இயங்கி வந்த கட்டுமான கழகத்தின் உறுப்பினராக இவர் செயல்பட்டு வந்தார்.

கட்டுமானத்துறையில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்புகள் மிகவும் முக்கியமானது. 1962ல் காலமானார் . ஆனால் அவரின் பல்வேறு சாதனைகளை இன்னும் இந்தியா பாடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இயங்கும் பல்வேறு கல்லூரிகளுக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close