கச்சத்தீவு தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இந்தியாவிடமிருந்து கிடைக்கவில்லை என்று மூத்த இலங்கை அமைச்சர் இந்தியன் எக்ஸ்பிரஸ்யிடம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தில், கச்சத்தீவை இலங்கையிடம் தி.மு.க, மற்றும் காங்கிரஸ் கொடுத்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இது தொடர்பாக அண்ணாமலை கூறியபோது, கச்சத்தீவை மீட்பதற்கான வேலைகளில் மத்திய அரசு தொடங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறுகையில்” இலங்கை பொருத்தவரை, கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளது. பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கை ஆரோக்கியமாக உள்ளது. கச்சத்தீவை திரும்ப பெறுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த பேச்சும் நடைபெறவில்லை. இது தொடர்பாக இந்தியா அரசிடம் இருந்து எந்த கோரிக்கையும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக பேச்சு எழுந்தால், வெளியுறுவு அமைச்சகம் இதற்கான பதிலை வழங்கும் “ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கூறுகையில் “இந்திரா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் அரசு கச்சத்தீவை 1974ல் இலங்கைக்கு கொடுத்தது என்றும் மேலும் இதை மறைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறுகையில் “ கச்சத்தீவை மீட்பதற்கான எல்லா நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கையில் உள்ள அமைச்சர் ஒருவர் கூறுகையில் “ புதிய அரசின் விருப்பத்தின்படி எல்லாம் நாடுகளின் எல்லைகளை மாற்றிக்கொள்ள முடியாது.
நல்லதோ அல்லது கெட்டதோ தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டு பகுதியில்தான் கச்சத்தீவு உள்ளது. எல்லைகள் தொடர்பாக ஒருமுறை முடிவு செய்யப்பட்டால், ஆளும் அரசு மாறியதால் அதை மாற்றிக்கொள்ள முடியாது. இலங்கை அமைச்சரவையில் கச்சதீவு தொடர்பாக இதுவரை விவாதிக்கப்படவில்லை.
கச்சத்தீவு என்பது தமிழர்களை சார்ந்த விஷயமாக இருந்தால் அவர்கள் எல்லைகளின் இரு பக்கங்களிலும் இருக்கிறார்கள். மேலும் இது தமிழ் மீனவர்களின் விஷயமாக இருந்தால், இவை இரண்டையும் ஒன்றாக பார்ப்பது பெருத்தமற்ற விஷயமாகும். இந்திய மீனவர்கள் அவர்களின் எல்லைகளை தாண்டி மீன் பிடிக்கிறார்கள், இது சர்வதேச கடல் சார் சட்டத்திற்கு எதிரானது “ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் “ எட்டுமொத்த கடல் பரப்பில் நடைபெறும் கடல் வளங்கள் அழிப்பு மற்றும் சுரண்டலால் இலங்கை தமிழக மீனவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“