Advertisment

42 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு: 10 தலித்துகளைக் கொன்ற ஒருவர் குற்றவாளி; நீதி இப்படித்தான் இருக்குமா?

வீட்டு சமையலறைக்குள் நுழைந்த 2 பேர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

author-image
WebDesk
New Update
sadhupur-murder

Sadhupur Murder

ஃபிரோசாபாத்தின் சாதுபூர் கிராமத்தின் தெருக்களில் காற்று வீசிக் கொண்டிருந்தது. மெயின்புரி மாவட்டத்தில் டிசம்பர் 30, 1981 அன்று குளிர்ந்த மாலை. கடிகாரத்தில் மாலை 6 மணி ஆனது. இருந்தும் வெளியில் இருட்டாகி விட்டது. அப்போது 30 வயதான பிரேம்வதி, தனது மகன்கள் ஹரிசங்கர்(12), கைலாஷ்(8),

14 வயது மகள் சுக்தேவி ஆகியோருடன் அதிக வெளிச்சம் இல்லாத மங்கலான சமையலறையில் ரொட்டி தயாரித்துக்கொண்டிந்தார்.

Advertisment

திடீரென்று இரண்டு பேர் சமையலறைக்குள் நுழைந்தனர். போலீஸ் சீருடையில் மூன்றாவது நபர் பிரதான கதவுக்கு வெளியே பார்வையாளராக நின்றார். ஐந்து நிமிடம் இருவரும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். சுக்தேவியின் வயிற்றிலும், ஹரிசங்கரின் கழுத்திலும், கைலாஷின் மார்பிலும் வயிற்றிலும் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

எப்படியோ பிரேம்வதி உயிர் பிழைத்தார். காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வாக்கிங் ஸ்டிக் கொண்டு நடந்து வருகிறார். அனார் சிங் யாதவ் தலைமையிலான கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஆண்களால் பட்டியல் சாதியைச் சேர்ந்த 6 பெண்கள் உட்பட 10 பேர் படுகொலை செய்யப்பட்ட நாளின் அப்பட்டமான நினைவூட்டலாகவும் இது அமையும்.

ஏறக்குறைய 42 ஆண்டுகளுக்குப் பிறகு 989 இல் ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே 31 அன்று சாதுபூர் படுகொலை வழக்கில் ஃபிரோசாபாத் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் - அனார் மற்றும் ஜப்பான் சிங் (இருவரும் இறந்துவிட்டனர்) மற்றும் 90 வயதான கங்கா தயாள் குற்றாவாளி ஆகியோர் குற்றவாளி என நிரூபிக்கப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) மற்றும் 307 (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 90 வயதான கங்கா தயாளுக்கு ஆயுள் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

“நியாயம் இப்படித்தான் இருக்குமா? என் வாழ்நாள் முழுவதும் நீதிக்காகக் காத்திருந்தேன். இப்போது எனக்கு நீதி கிடைத்துவிட்டதா?” 72 வயதான பிரேம்வதி தனது கணவர் ராம் பரோஸ் (82) அருகில் அமர்ந்து கதறி அழுதார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் தனது குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்ட வீட்டில் அமர்ந்து அழுதார்.

புதிய மாவட்டம்

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான ஃபிரோசாபாத் மாவட்ட பொது வழக்கறிஞர் ராஜீவ் உபாத்யாய் கூறுகையில், 1989-ம் ஆண்டு ஃபிரோசாபாத் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டதால், விசாரணை எங்கு நடத்தப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வதில் அதிக நேரம் செலவிடப்பட்டதால் தீர்ப்பு தாமதமானது என்றார்.

இந்த சம்பவம் நடந்தபோது, ​​ஷிகோஹாபாத் காவல் நிலையம் (அவரது பணி வரம்பிற்கு உட்பட்ட சதுபூர் கிராமம்) மெயின்புரி மாவட்டத்தில் இருந்தது. 989 இல், ஃபிரோசாபாத் மாவட்டம் உருவாக்கப்பட்டது மற்றும் ஷிகோஹாபாத் புதிய மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. இந்த வழக்கு மெயின்புரி மாவட்டத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டதால், இந்த விஷயத்தை எந்த மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்பதில் வாதங்கள் இருந்தன என்று உபாத்யாய் கூறினார். அலகாபாத் உயர்நீதிமன்றம் ஃபிரோசாபாத் நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு கால தாமதம் ஆனது. தன்பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒத்திவைக்கக் கோரினர். இதனால் வழக்கு மேலும் தாமதமானது என்றார்.

பிரேம்வதி படுகொலைகளை நினைவு கூர்ந்தபோது, ​​அவரது கண்கள் கண்ணீரால் நிரம்பியது. தொண்டை அடைத்தது மற்றும் உதடுகள் நடுங்கியது. அவர் கூறுகையில், எல்லாம் மிக வேகமாக நடந்தது. ஒரு கணம் என்ன நடக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் முற்றிலும் உணர்ச்சியற்றவனாக இருந்தேன். காலில் சுடப்பட்டாலும் எனக்கு எந்த வலியும் ஏற்படவில்லை. அவர்கள் கண்மூடித்தனமாக சுட்டார்கள். அவர்கள் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் எங்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை.

(எல்லாம் முடிந்தது, போகலாம்) என்று யாரோ சொன்னது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது என்றார்.

அன்று அந்த சம்பவத்தில் பிரேம்வதியின் குடும்பத்தில் பாதி பேர் உயிரிழந்தனர். ராம் பரோஸ், பிரேம்வதி மற்றும் அவர்களது மகன் மகேந்திர சிங் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். அப்போது மகேந்திர சிங்கிற்கு 2 வயது தான். இப்போது 44 வயதான மகேந்திர சிங் அன்று மாலை வேறு அறையில் படுத்திருந்ததால் மட்டுமே உயிர் பிழைத்தார். சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு கண்பார்வை இழந்த ராம் பரோஸ், பக்கத்து வீட்டில் இருந்ததால் மட்டுமே உயிர் பிழைத்தார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு தனது வீட்டை நோக்கி ஓடுவந்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.

கூலி வேலை செய்து வரும் மகேந்திராவுக்கு மனைவி, 6 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். அவர் கூறுகையில்,

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களுக்கும் கருணை அடிப்படையில் வேலை தருவதாக அரசாங்கம் உறுதியளித்தது. நான் 18 வயதில் இருந்து அந்த வேலையைப் பெற முயற்சிக்கிறேன். நான் அரசாங்கத்திற்கு பல கடிதங்கள் எழுதியுள்ளேன். இதற்கான பதிலுக்கு, நான் ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு மாறி மாறி அனுப்பப்பட்டேன்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு பிரேம்தேவி- ராம் பரோஸ் இரண்டு குழந்தைகளைப் பெற்றனர். மகேந்திராவின் உடன்பிறந்தவர்கள் 1 சகோதரி, சகோதரனுக்கும் அரசாங்கம் வேலை வழங்கவில்லை.

சில வீடுகளுக்கு அப்பால், ராம் நரேஷ், அன்று தனது 60 வயது பாட்டி சமேலி தேவி எப்படி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதைப் பற்றி தான் கேள்விப்பட்டதாகக் கூறினார். 36 வயதான அவர் தனது தந்தை ராம் ரத்தனின் கொடூரமான படுகொலை பற்றிய கதைகளைக் கேட்டு வளர்ந்தார். கடந்த ஆண்டு தனது தந்தை இறந்துவிட்டதாகவும், அவருடன் கருணை அடிப்படையில் வாக்குறுதியளிக்கப்பட்ட வேலைக்காக போராடி இறந்ததாகவும் அவர் கூறினார். ராம் நரேஷ் கூறுகையில், தனது தந்தை ஒரு வருடத்திற்கு பியூனாக நியமிக்கப்பட்டார். அதன்பின் அவரை டிஸ்மிஸ் செய்தனர் என்றார்.

வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான ஸ்வரூப், “எனது தெருவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. வீட்டுக்குள் ஓடி வந்து கட்டிலின் அடியில் ஒளிந்து கொண்டேன். உள்ளே மண்ணெண்ணெய் விளக்கு எரிந்தது. நான் கொள்ளையர்களை அப்படித்தான் பார்த்தேன். 3 பேர் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் எனது தம்பி சுரேஷ் (18), எனது தாய் பார்வதி (60), அண்ணி ஷீலாதேவி (28) ஆகியோரைக் கொன்றனர்.

அடுத்த சில நாட்களில், முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங், அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் கியானி ஜைல் சிங் மற்றும் உ.பி., முதல்வர் வி.பி. சிங் போன்ற மாநில மற்றும் தேசிய தலைவர்களின் வருகையால் கிராமம் கோட்டையாக மாறியது என்று ஸ்வரூப் கூறினார். மற்ற இரண்டு விஐபி பார்வையாளர்கள் - அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் சந்திரசேகர் - பிரதமர்களாக வருவார்கள் என்று கூறப்பட்டது.

அந்தக் கிராமத்தில் அப்போது மின்சாரம் இல்லை இருளைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளையர்கள் எங்களைத் தாக்கினார்கள். அரசாங்கம் கிராமத்திற்கு வாழ்நாள் முழுவதும் இலவச மின்சாரம் உறுதியளித்தது. அரசாங்கம் சொன்ன வார்த்தையை சிறிது காலம் காப்பாற்றியது. இப்போது, ​​கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, எங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ணம் தராவிட்டால் சிறையில் அடைப்போம் என நிர்வாகம் மிரட்டியுள்ளது. இது எங்கள் காயங்களில் உப்பு போடுவது போன்றது,” என்றார் ஸ்வரூப்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கங்கா தயாளின் குடும்பத்தினரிடம் பேசியது. துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு சதுபூரிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள தனது மூதாதையர் கிராமமான கத் டான்சாஹிக்கு குடியேறினார்.

கிட்டத்தட்ட 50 கிமீ தொலைவில் உள்ள நங்லா கர் கிராமத்திற்குச் சென்றார். ஜாதி பாகுபாடு குறித்த கேள்விக்கு நங்லா காரில் உள்ள விவசாயியான கங்கா தயாளின் மூத்த மகன் ஜெய் பிரக்ஷ்(62) கூறுகையில், “எல்லா இடங்களிலும் சாதிவெறி இருக்கலாம், ஆனால் நாங்கள் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை” என்றார்.

தண்டனை பெற்ற போதிலும், ஜெய் பிரக்ஷ் தனது தந்தை நிரபராதி என்று தொடர்ந்து கூறுகிறார். அன்று என் தந்தை சாதுபூரில் இல்லை. தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார் என்றார். மே 31-ம் தேதி மேல்முறையீட்டு விசாரணையில் ஃபிரோசாபாத் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதி ஹர்வீர் சிங், “இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் குற்றம் சாட்டப்பட்டவர் (கங்கா தயாள்) சம்பவ இடத்தில் இருப்பது உறுதியாகிறது. நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்தபோது, ​​​​அவர்கள் உள்ளே இருந்தார்கள் மற்றும் அவர்களைப் பார்த்தார்கள் என்ற உண்மையை கூறுகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட கங்கா தயாள் மீதான குற்றத்தைத் தவிர, அரசுத் தரப்பு முன்வைத்த ஆதாரங்கள் வேறு எந்த முடிவையும் குறிப்பிடவில்லை என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment