துப்புரவுத் தொழிலாளர்கள் மரணம் குறித்து ஒரு பார்வை : கழிவு நீர் தொட்டி மற்றும் சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்யும் துப்பரவுத் தொழிலாளர்கள் ஒவ்வொரு ஐந்து நாளிற்கு ஒருவர் உயிரிழக்கின்றனர். ஊடகங்கள் மற்றும் மாநில அறிக்கைகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் இந்த செய்தி அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது.
தேசிய சஃபை ஊழியர்கள் இயக்கத்தின் அறிக்கைப்படி துப்பரவுத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 123 ஊழியர்கள் கடந்த ஜனவரியில் இருந்து உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் மட்டும் தேசிய தலைநகர் டெல்லியில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கைக்கும் மேலாகவும் உயிர் இழந்திருக்கலாம் என்று சஃபையில் வேலை செய்யும் அலுவலர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
Read More : To read this article in English
மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு வரையறுக்க முடியாத நிலை இன்னும் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புறங்களில் இருக்கும் கழிவு நீர்த்தொட்டியில் இறங்கி சுத்தம் செய்பவர்கள் பற்றிய முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை என்றும் அம்மையம் தெரிவித்திருக்கிறது.
28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டும் இத்தொழிலாளர்களின் இறப்பு குறித்து முறையான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தகவல் பெறப்பட்டது எப்படி?
28 மாநிலங்களில் வெளியான இந்தி மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் பதிவான சம்பவங்களின் அடிப்படையிலும் பிராந்திய பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையிலும் இந்த தகவல் திரட்டப்பட்டது.
ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் துப்புரவுத் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. அதே போல் மகாராஷ்ட்ராவில் இந்த குறிப்பிட்ட கால இடைவேளையில் இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்று அந்த மாநில அரசு கூறியிருக்கிறது.
மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள்
2011ம் ஆண்டு நடத்தப்பட்ட SECC மக்கள்த் தொகை கணக்கெடுப்பில் மகராஷ்ட்ராவின் புறநகர் பகுதியில் மட்டும் 65,181 குடியிருப்புகள் இருக்கின்றன. இதில் வீட்டிற்கு ஒருவர் என்ற ரீதியில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியிலும் துப்பரவுத் தொழிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் பற்றி ஆவணம் செய்யப்பட்டது போல் நகர்புறங்களில் வசிக்கும் துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடவில்லை SECC. அதிக அளவு துப்புரவுத் தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் கிராமங்களாஇக் கொண்டிருப்பது மத்திய பிரதேசம் தான். அங்கு மற்றும் சுமார் 23,105 துப்புரவுத் தொழிலாளார்கள் வசிக்கிறார்கள். இங்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என சஃபை மையம் குறிப்பிட்டிருக்கிறது.
எந்தெந்த பகுதிகளில் அம்மக்கள் வாழ்கிறார்கள் என்று அறிய முற்பட்ட போது “சட்டத்தின் படி மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது குற்றமாகும். அதனால் அது குறித்த தகவல்களை தர மறுத்துவிட்டது. சட்டப்படி இது குற்றம் என்பதால், கழிவுத் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்பவர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவிகள் கிடைக்காமலும் போய்விடுகிறது.
இப்படியான நிலையில் உயிரிழப்பவர்களுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் இழப்பீடாகத் தரவேண்டும். ஆனால் உயிரிழந்த 123 நபர்களில் 70 பேரின் உயிரிழப்பிற்கு மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பதிவு செய்ய மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது. அந்த சர்வேயின் முடிவில் ஒவ்வொரு மாநிலத்திலும் 20,000 முதல் 50,000 வரையிலான துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் எடுத்த சர்வேயில் 170 மாவட்டங்களில் 109 மாவட்டங்கள் தங்களின் ஒத்துழைப்பை தந்தது. அதில் 62 மாவட்டங்களில் 1 துப்புரவுத் தொழிலாளர் என்ற ரீதியில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
துப்புரவுத் தொழிலாளர்கள் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்
சஃபை கரம்சரி அந்தலோன் இயக்கத்தின் தலைவர் பெஸ்வாடா வில்சன் இது குறித்து பேசுகையில் “துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்த சர்வேயை மேலும் 300 மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. சஃபை கரம்சரி ஆண்ட்லான் எடுத்த சர்வேயில் இதுவரை 300 நபர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் இது போன்று இறக்கும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு மற்றும் மாற்று வேலைகளை தரும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.
வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் கழிவுநீர் தொட்டி மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்ய மெஷினகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இது நாள் வரையில் இறந்த மக்களுக்காக பொறுப்பேற்றுக்கொள்ள அரசு முன்வரவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.