Advertisment

லோக் சபா, மாநிலங்களின் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்; இரண்டு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்த இரண்டு மசோதாக்களும் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு, விரிவான ஆலோசனைக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜே.பி.சி) பரிந்துரைக்கப்படும் எனத் தெரிகிறது.

author-image
WebDesk
New Update
UP Elections 1

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு முதல் இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறார்.

Damini Nath , Liz Mathew

Advertisment

ஒரே நேரத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்துவது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சரவை கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, வியாழக்கிழமை இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: Cabinet clears two Bills to kickstart simultaneous polls, focus first on Lok Sabha and State Assemblies

அவற்றில் லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒன்றாக தேர்தலை நடத்துவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதா ஒன்று, டெல்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபைகளுக்கான தேர்தல்களை சீரமைப்பதற்கான மற்றொரு சாதாரண மசோதா ஆகும்.

Advertisment
Advertisement

இந்த இரண்டு மசோதாக்களும் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.  “ஆனால், அது வெறும் அறிமுகமாக இருக்கும், சில நிமிடங்களில் அது நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்குச் செல்லும், அந்த கூட்டுக்குழு சபையால் அமைக்கப்படும்” என்று பா.ஜ.க வட்டாரம் தெரிவித்துள்ளது. இருப்பினும், 2029-ல் அல்லது 2034-ல் ஒரே நேரத்தில் தேர்தல்கள் தொடங்கப்படுமா - செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு உறுதிப்படுத்தவில்லை.

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இந்த மசோதா மீது "விரிவான விவாதங்கள்" இருக்கும் என்று அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவைத் தவிர, ஆளும் பா.ஜ.க-வும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கருத்து குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளும்.

உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களை மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களுடன் சீரமைப்பதற்கான சட்ட வரைவு எதையும் மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை பரிசீலிக்கவில்லை. ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த படிப்படியாக அமல்படுத்த மத்திய அரசு விருப்பம் தெரிவித்திருப்பதை இது குறிக்கிறது.

இந்த கூட்டத்தில், தேசிய நாடாளுமன்றம் (லோக்சபா) மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒருங்கிணைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது, உள்ளாட்சித் தேர்தல்களை (ஊராட்சி மற்றும் நகராட்சி) பின்னர் ஒரு கட்டத்திற்கு விட்டுவிட வேண்டும். இந்த அணுகுமுறை மார்ச் மாதம் ராம்நாத் கோவிந்த் கமிட்டி வழங்கிய முதல் கட்ட பரிந்துரைகளுடன் ஒத்துப்போகிறது. இந்த குழு இரண்டு கட்ட செயல்முறையை முன்மொழிந்துள்ளது: முதலில், தேசிய மற்றும் மாநில தேர்தல்களை ஒருங்கிணைத்தல், அதைத் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல்கள் ஒருங்கிணைந்த தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் நடத்த வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான மசோதாக்களை மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் அல்லது மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலின்றி நாடாளுமன்றத்தால் நிறைவேற்ற முடியும். இருப்பினும், உள்ளாட்சித் தேர்தல்களை சீரமைப்பதற்கான ஒரு மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்தினால் அல்லது இந்திய தேர்தல் ஆணையம் (இ.சி.ஐ) மூலம் ஒற்றை வாக்காளர் பட்டியலை உருவாக்கினால், அது இயற்றப்படுவதற்கு முன்பு மாநில சட்டமன்றங்களில் குறைந்தது பாதியளவு ஒப்புதல் தேவைப்படும்.

கோவிந்த் குழு ஒரே நேரத்தில் தேர்தல்களுக்கு மாற்றுவதற்கு வசதியாக "ஒரு இடைநிலை நடவடிக்கையை" பரிந்துரைத்தது. இது "பொதுத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் மன்றத்தின் முதல் அமர்வின் தேதி" என வரையறுக்கப்பட்ட "நியமிக்கப்பட்ட தேதியை" அடையாளம் காணும். இந்த நியமிக்கப்பட்ட தேதி-க்குப் பிறகு தேர்தலுக்குச் செல்லும் அனைத்து மாநில சட்டசபைகளும் அவற்றின் விதிமுறைகள் மக்களவையுடன் ஒத்திசைக்கப்படும், இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அளவில் தேர்தல் சுழற்சிகள் சீரமைக்கப்படும்.

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களும் நிறைவடைந்துள்ள நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சட்டசபைகளின் விதிமுறைகளை மற்றவற்றுடன் இணைப்பதற்கு இந்த மசோதாக்கள் எவ்வாறு குறிப்பிடும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைக்கப்பட்ட, கோவிந்த் கமிட்டி, மார்ச் 14-ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் முன், அரசியல் கட்சிகள் உட்பட பங்களிப்பவர்களுடன் விரிவான ஆலோசனைகளை நடத்தியது. தங்கள் கருத்துக்களை சமர்ப்பித்த 47 அரசியல் கட்சிகளில், 32 கட்சிகள் இந்த திட்டத்தை ஆதரித்தன. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிகளைத் தவிர, பி.ஜே.டி, அகாலி தளம் மற்றும் குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி ஆகியவை இந்தத் திட்டத்தின் பிற ஆதரவாளர்களாக உள்ளனர். இதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம், பி.எஸ்.பி, டி.எம்.சி, எஸ்.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

லோக்சபாவில் பா.ஜ.க-வின் எண்ணிக்கை குறைந்தாலும், ஒரே நேரத்தில் தேர்தல்களை அமல்படுத்துவதில் என்.டி.ஏ அரசு உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது "எப்போதும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும்" என்று பா.ஜ.க தலைவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது அதை செயல்படுத்துவதற்கு அரசாங்கத்தை ஊக்கப்படுத்தியுள்ளது. இது புதிய பதவிக்காலத்தின் முதல் வருடம். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றதன் மூலம் கட்சியும், அரசாங்கமும் உற்சாகமடைந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க-வின் தலைமைக் கொறடாவான சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், ஆட்சியை சீராகச் செல்வதை உறுதி செய்வதே யோசனை. “இந்த மசோதா நாட்டுக்கு முக்கியமானது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும், எங்களுக்கு தேர்தல் வருகிறது, அரசாங்கத்தின் செயல்திறன் 50 சதவீதம் குறைகிறது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் தேர்தல் நடைபெறாவிட்டாலும், அந்த மாநிலங்களில் இருந்து மூத்த அதிகாரிகள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பணிக்கு அழைக்கப்படுகிறார்கள். எல்லோரும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்கள். ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்பதை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியான முறையில் ஆட்சியை நடத்த முடியும்” என்று ஜெய்ஸ்வால் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

சுதந்திர இந்தியாவில் ஆரம்பத்தில் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடந்து இருந்ததையும் ஜெய்ஸ்வால் சுட்டிக்காட்டினார். "இது 1971 வரை இந்த முறை இருந்தது. அரசியலமைப்பை நிறுவிய நம் முன்னோர்களால் இந்த யோசனை உருவாக்கப்பட்டது, ஆனால், 1970-களில் அது குறுக்கிடப்பட்டது. அரசியலமைப்பு முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டபோது இருந்த நடைமுறைக்கு நாங்கள் இப்போது திரும்பி வருகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Lok Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment