Advertisment

அமித் ஷா, ஆதிர், ஆசாத்; ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை ஆராய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு; அமித் ஷா, ஆதிர், ஆசாத் உள்பட 8 பேர் நியமனம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
election

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு; அமித் ஷா, ஆதிர், ஆசாத் உள்பட 8 பேர் நியமனம்

நாட்டில் ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை நடத்துவது என்ற தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு சனிக்கிழமை அமைத்தது.

Advertisment

ராம்நாத் கோவிந்த் தவிர, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நீதிபதி ஹரிஷ் சால்வே, முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி, நிதி ஆயோக் முன்னாள் தலைவர் என்.கே சிங் மற்றும் மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி காஷ்யப் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: அரசியலமைப்புத் திருத்தங்கள், புதிய சட்டங்கள்… ‘ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு சட்ட சவால்கள்!

எந்த காரணமும் கூறாமல் செப்டம்பர் 18-22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை அரசாங்கம் ஒரு திடீர் அறிவிப்பில் அழைத்த சில நாட்களுக்குப் பிறகு இது வந்துள்ளது. குழு தனது அறிக்கையை சமர்ப்பித்ததும், பொது களத்திலும், நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

பிரகலாத் ஜோஷி ஒரு ட்வீட்டில், “இந்தியா ஜனநாயகத்தின் தாய், நமது ஜனநாயகம் முதிர்ந்த ஜனநாயகம். நாட்டின் நலன் தொடர்பான விஷயங்களை விவாதிக்கும் நீண்ட மற்றும் வளமான பாரம்பரியம் உள்ளது. தற்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் விவாதிக்கவும், மக்களின் கருத்தை அறியவும் ஒரு குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் விரைவில் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

1967 ஆம் ஆண்டு வரை மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட்டன, இது "நாட்டில் வளர்ச்சிக்கான நல்ல சூழ்நிலையை" உருவாக்கியது. அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது "முடிவெடுக்கும் செயல்பாட்டில் சிக்கல்களுக்கு" வழிவகுக்கும் என்று பிரகலாத் ஜோஷி கூறினார்.

ஜூலை 27 ஆம் தேதி வரை, சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், இந்த பிரச்சினையை சட்ட ஆணையம் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

"லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான நடைமுறைச் சாத்தியமான சாலை வரைபடம் மற்றும் கட்டமைப்பை உருவாக்குவதற்கான கூடுதல் ஆய்வுக்காக இந்த விவகாரம் இப்போது சட்ட ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது," என்று பிரகலாத் ஜோஷி கூறினார்.

ஜூன் 2019 இல் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, ​​அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், "ஒரே நாடு, ஒரே நேரத்தில் தேர்தல்" என்பது "காலத்தின் தேவை" என்று கூறியிருந்தார்.

“கடந்த சில தசாப்தங்களில், நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவதால், வளர்ச்சித் திட்டங்களின் வேகமும் தொடர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளன. மாநில மற்றும் தேசிய பிரச்சினைகளில் தெளிவான தீர்ப்பை வழங்குவதன் மூலம் நம் நாட்டு மக்கள் தங்கள் ஞானத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ‘ஒரு தேசம் – ஒரே நேரத்தில் தேர்தல்’ என்பது காலத்தின் தேவை, இது விரைவான வளர்ச்சியை எளிதாக்கும், அது நம் நாட்டு மக்களுக்கு பயனளிக்கும்,” என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

India Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment