Advertisment

உலகளவில் செமிகண்டக்டர்ஸ் பற்றாக்குறை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பதில் சவால்: ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமா?

வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) தயாரிப்பதில் முக்கிய அங்கமான செமிகண்டக்டர்கள் மற்றும் சிப்-களின் உலகளாவிய பற்றாக்குறை குறித்து தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸிடம் வட்டாரங்கள் தெரிவித்தன.

author-image
WebDesk
Oct 23, 2023 10:23 IST
New Update
One-nation, one-poll

One-nation, one-poll: Election Commission says it needs up to a year’s ‘lead time’ for EVMs, VVPATs

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிக்கையை இறுதி செய்ய சட்ட ஆணையம் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் (EC), இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டக் குழு உறுப்பினர்களுடன் நடத்திய கூட்டத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிப்பதில் உள்ள சவால்களை மேற்கோள் காட்டி, நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வருடம் வரை நேரம் தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியதாக அறியப்படுகிறது.

Advertisment

செப்டம்பர் 27 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்முதலில் அறிவித்தபடி, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான சட்ட ஆணையம், நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒன்றாக தேர்தல் நடத்தும் யோசனையை ஆதரிக்க வாய்ப்புள்ளது.

இது லோக்சபா தேர்தலுடன் சில மாநில சட்டசபை தேர்தல்களை நடத்துவதன் மூலம் 2024 ஆம் ஆண்டிற்கான தற்காலிக காலக்கெடுவை பரிந்துரைக்கலாம். 2029 இல் முழு அளவிலான தேர்தல் நடத்துவதற்கு இது ஒரு முன்னோடியாக இருக்கும்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டக் குழுவுக்கு அளித்த பின்னூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) தயாரிப்பதில் முக்கிய அங்கமான செமிகண்டக்டர்கள் மற்றும் சிப்-களின் உலகளாவிய பற்றாக்குறை குறித்து தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸிடம் வட்டாரங்கள் தெரிவித்தன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய VVPAT இயந்திரங்களை தயாரிப்பதற்கு இது ஒரு முக்கிய அங்கமாகும்.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்தின் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரத் தேவைகளை (சுமார் 4 லட்சம்) பூர்த்தி செய்வதில் இந்தப் பற்றாக்குறை குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தியது. இது அனைத்து தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதற்கு தேவைப்படும் கூடுதல் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இரண்டு உற்பத்தியாளர்களின் (பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்) தற்போதைய கடமைகளைக் கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தியை அதிகரிக்க ஒரு வருடம் வரை குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும் என்று தேர்தல் ஆணையம் கருதியது.

மேலும், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரை அடுத்து, semiconductors பற்றாக்குறை, EVM கொள்முதலுக்கான காலக்கெடுவை மேலும் குழப்பியுள்ளது, என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி கூறினார்.

semiconductors பற்றாக்குறை தொடர்பான உற்பத்தி சவால்கள் குறித்து தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்தது இது முதல் முறை அல்ல.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பணியாளர்கள், பொதுக் குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில், 2022-2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் 80 சதவீதத்திற்கு மேல் செலவழிக்க இயலவில்லை, செமிகண்டக்டர்களின் உலகளாவிய பற்றாக்குறை காரணமாக இயந்திர உற்பத்தி செயல்முறையில் தாமதம் ஏற்பட்டது என்று தேர்தல் குழு கூறியது.

தேர்தல் செயல்பாட்டின் நம்பகத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கைக்கு சேதம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், உற்பத்தி திறனை அதிகரிக்க தனியார் உற்பத்தியாளர்களை, அணுகுவதற்கு தேர்தல் ஆணையம் எதிராக உள்ளது.

2024 மற்றும் 2029 ஆம் ஆண்டுகளில் ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் நடத்தப்பட்டால் அதற்கு தேவைப்படும் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் VVPAT இயந்திரங்கள் குறித்த மதிப்பீடுகளை சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் அடிப்படையில் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது:  control unit, ballot unit, VVPAT.

2024 ஆம் ஆண்டில், கூடுதலாக 11.49 லட்சம் control unit, 15.97 லட்சம் ballot unit மற்றும் 12.37 லட்சம் VVPAT தேவை. இதற்கு சுமார் ரூ.5,200 கோடி கூடுதல் செலவாகும்.

2029ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால், தேர்தல் ஆணையத்திற்கு மொத்தம் 53.76 லட்சம் ballot units, 38.67 லட்சம் control unit மற்றும் 41.65 லட்சம் VVPATகள் தேவைப்படும்.

இதில் 26.55 லட்சம் ballot units, 17.78 லட்சம் control unit, 17.79 லட்சம் VVPAT பற்றாக்குறை எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசாங்கம் 8,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.

வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்குச் சாவடிகள் காரணமாக, 2029 ஆம் ஆண்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT களுக்கான அதிகரித்த தேவை உள்ளது. இது 2024 இல் 11.8 லட்சத்திலிருந்து 2029 இல் 13.57 லட்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read in English: One-nation, one-poll: Election Commission says it needs up to a year’s ‘lead time’ for EVMs, VVPATs

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

#Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment