’ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை மத்திய அரசு அமல்படுத்தினால் 2024, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதற்கான வேலைகளை உடனே தொடங்கப்படும் எனவும் மாநில ஆட்சி 5 ஆண்டுகள் நிறைவு செய்வதற்கு முன்பாகவே கலைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தலை ஒன்றாக நடத்த மத்திய அரசு முடிவு செய்தால். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, இதற்கான வேலைகள் உடனடியாக தொடங்கப்படும். மேலும் 2029-ல், மாநில ஆட்சி கலைக்கப்பட்டு, ஒரே தேர்தல் நடத்தப்படும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, இதற்கான முடிவை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், இந்த மாற்றம் அவசியமான ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள 10 மாநிலங்களில், தற்போதுதான் புதிய ஆட்சி அமைந்துள்ளது. இந்த மாநிலங்களுக்கு 2028ம் ஆண்டில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும். அப்போது பதவியேற்கும் புதிய அரசு வெறும் 1 வருடம்தான் ஆட்சியில் இருக்கும். உடனடியாக அந்த ஆட்சி கலைக்கப்படும். ஹிமாச்சல் பிரதேசம், மேகாலயா, திருபுரா, கர்நாடகா, தெலுங்கானா, மிரோரம், மத்திய பிரதேசம், சண்டிஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவான வருடத்தில் அடுத்த தேர்தல் நடத்தப்படலாம்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், குஜரத்தில் உள்ள மாநில பா.ஜ.க அரசுகளும் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவாக ஆட்சியில் இருக்கும்போது மீண்டும் தேர்தல் நடத்தப்படும். இதுபோல மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா அரசுகள், 2026ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதால், இந்த மாநிலங்களும் அடுத்துவரும் 3 ஆண்டுகளில் மீண்டும் தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்படும். அருணாசல் பிரதேஷ், சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேம், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் நிலையில் உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தலை அமலுக்கு கொண்டுவர, உயர்நிலைக் குழு, ஆர்டிகல் 83 மற்றும் ஆர்டிகல் 172-ல் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இந்த ஆர்டிகல் 83 சட்டமானது, மக்களவை தேர்தல் ஆட்சி காலத்தை தீர்மானிக்கும் ஒன்று. மேலும் ஆர்டிகல் 172 சட்டமானது, மாநில ஆட்சிக் காலத்தை தீர்மானிக்கும் ஒன்று. இந்த இரண்டு சட்ட திருத்தத்தையும், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்திய பின்பு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு, நடைபெறும் முதல் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும். அப்படி ஒரு அவைகளில் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ’நியமிக்கப்பட்ட தேதி’ ( appointed date) ஒன்று அறிவிக்கப்படும், அந்த தேதியில் இருந்து மாநில அரசின் ஆட்சிலாம், மத்திய அரசின் ஆட்சி எப்போது முடியுமோ, அப்போது வரை தொடரும் என்பதாக மாற்றப்படும்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“