கூகுள் பே, பேடிஎம் பயனாளரா நீங்கள்? : எச்சரிக்கையா இல்லைன்னா ஹோகயா தான்…

Online payment fraud : மும்பையின் தானே பகுதியை சேர்ந்த ஒருவர், கூகுள் பே, பேடிஎம் பணப்பரிவர்த்தனை முறையில் ரூ.1 லட்சம் பறிகொடுத்த நிகழ்வு, ஆன்லைன் பேமெண்ட் செய்யும் பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By: Updated: January 6, 2020, 05:08:45 PM

மும்பையின் தானே பகுதியை சேர்ந்த ஒருவர், கூகுள் பே, பேடிஎம் பணப்பரிவர்த்தனை முறையில் ரூ.1 லட்சம் பறிகொடுத்த நிகழ்வு, ஆன்லைன் பேமெண்ட் செய்யும் பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர், தான் பயன்படுத்தி வந்த பர்னிச்சர் பொருள் ஒன்றை விற்க விரும்புவதாக கடந்த 2019 டிசம்பர் 21ம் தேதி, பேஸ்புக்கில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?

24ம் தேதி, ராஜேந்திர சர்மா என்பவர் இவரை தொடர்பு கொண்டார். தான் அந்த பொருளை வாங்கிக்கொள்வதாகவும், அதற்குரிய பணத்தை, ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு உதவும் கூகுள்பே மற்றும் பேடிஎம் மூலம் செலுத்துவதாக தெரிவித்தார்.

அவரும் தனது அக்கவுண்ட் நம்பர், கூகுள் பே, பேடிஎம் தகவல்களை தர, பணம் அவரது அக்கவுண்ட்டில் கிரெடிட் ஆனது. ஆனால், சில நிமிடங்களிலேயே, அவரது வங்கிக்கணக்கிலிருந்து ரூ. 1.01 லட்சம் கூகுள் பே மற்றும் பேடிஎம் வாயிலாக 3 முறை எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின் அவர், அந்த நபரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தவறுதலாக உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டது. நீங்கள் வேறொரு வங்கிக்கணக்கு எண்ணை தாருங்கள், அதில் பணத்தை போட்டுவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த வர்த்தர்,உடனடியாக போலீசில் புகார் அளித்தார். அந்த நபர் மீது தகவல்தொழில்நுட்ப பிரிவில், இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து, போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Online payment fraud man loses rs 1 lakh during transactions on paytm google pay

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X