கேரளாவின் காங்கிரஸ் பிரிவில் மோதல் போக்கு அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.சி.சி தலைவர் கே.சுதாகரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் ஆகியோர், அமைப்பை முழுமையாக சீரமைக்க கோரும் நடவடிக்கைக்கு மூத்த தலைவர்களான உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா எதிர்ப்பு தெரிவித்தள்ளனர். இதற்கிடையில், உம்மன் சாண்டி நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, அமைப்பை சீரமைக்கும் நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மூத்த தலைவர்கள் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள என அறிவுறுத்தியுள்ளார்.
கேபிசிசி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, சோனியாவை சாண்டி முதல் முறையாக சந்தித்துள்ளார். ஏஐசிசி பொறுப்பாளர் தாரிக் அன்வர் இப்போது மற்றொரு அமைதிப் பயணமாக கேரளா செல்லவுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அட்வைஸ்
டெல்லியில் காற்றுமாசு மிகவும் மோசமடைந்துள்ளதால் முடிந்தவரை தனிநபர் வாகனங்கள் அல்லது அரசு வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு தனது ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
பணியாளர்கள் அமைச்சகம் ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தனி காரை பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரே காரில் ஊழியர்கள் வரலாம் அல்லது பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தியள்ளது. இதன் மூலம் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்தலாம். அதே சமயம், காரில் ஒன்றாக வந்தாலும், கோவிட் நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை உயர் ரக அதிகாரிகள் எவ்வாறு பின்பற்ற முடியும் என சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலோ-இந்தியர்கள் கணக்கெடுப்பு
ஆங்கிலோ-இந்தியர்களின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் 2021ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சரியாக மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறு, முன்னாள் எம்பி சார்லஸ் டயஸ் தலைமையிலான ஆங்கிலோ-இந்தியன் சங்கத்தின் பிரதிநிதிகள், சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியை சந்தித்தனர்.
பிரதிநிதிகள் கூற்றுப்படி, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஆங்கிலோ-இந்தியர்களின் எண்ணிக்கை தவறாக கணக்கிடப்பட்து. எங்கள் குழு பிரச்சினையை சரிசெய்ய கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil