பாகிஸ்தான் தாக்குதல்களைத் தொடர்ந்தால், நாங்கள் நிறுத்த மாட்டோம்... கடைசி வரை செல்வோம்" என்று இந்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது என்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு பதிலடியாக, லாகூர் உட்பட பாகிஸ்தானில் உள்ள "பல இடங்களில்" விமான பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை இந்திய ஆயுதப் படைகள் செயலிழக்கச் செய்துள்ளன என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரிக்க முயன்றதே இதற்குக் காரணம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அந்த அதிகாரி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய ராணுவ மோதலில் எதுவும் "நிச்சயமற்றது" என்றார். பாகிஸ்தான் எந்த அளவிற்கு, விரைவாக பதற்றத்தை அதிகரிக்கிறது என்பதைப் பொறுத்து இந்தியாவின் பதில்கள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Operation Sindoor: If (Pakistan) will go further, we will not stop
சிறந்த முடிவுக்காக நாங்கள் தயாராக உள்ளோம், ஆனால் என்ன நடந்தாலும் எதிர்கொள்ளும் மன உறுதி உண்டு என்று அந்த உயர்மட்ட அதிகாரி கூறினார். இதன்மூலம், அரசின் மதிப்பீடு வெளிப்படுகிறது. இந்தியா எப்போதும் தனது நடவடிக்கைகள் "பதட்டத்தை தூண்டும் வகையில் இருந்தல்ல" என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளது. பின்வாங்குவதற்கான முதல் அடியை எடுப்பது பாகிஸ்தானின் கையில்தான் உள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமதுவின் முகாம்கள் உட்பட 9 துல்லியமான இலக்குகளை இந்தியா தேர்ந்தெடுத்து பயங்கரவாத உள்கட்டமைப்பை மட்டுமே தாக்கியது என்றும், ஏற்படுத்தப்பட்ட சேதத்திற்கான "காட்சி மற்றும் வீடியோ ஆதாரங்களை" உடனடியாக வழங்க முடியும் என்றும் அந்த உயர் அதிகாரி மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியாவின் தாக்குதல் மற்றும் கண்காணிப்பு திறன்களில் ஒரு பெரிய முன்னேற்றத்தையும் காட்டியது. "பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல இலக்குகள் உட்பட, நாங்கள் எவ்வளவு துல்லியமாக எங்கள் இலக்குகளைத் தேர்ந்தெடுத்தோம் என்பதையும், ஒரு இலக்கையும் தவறவிடவில்லை என்பதையும் நாங்கள் நிரூபித்துள்ளோம். மேலும், முழு நடவடிக்கையின் போதும் நாங்கள் ஒரு கூடுதல் இலக்கையும் தாக்கவில்லை," என்று அந்த உயர் அதிகாரி கூறினார்.