நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) தொடர்பான பிரச்சனைகளை கனிமொழி, சசி தரூர் மற்றும் சுதீப் பந்தோபாத்யாய் ஆகியோர் எழுப்பினர்.
ஆங்கிலத்தில் படிக்க: As Oppn and Centre spar over MGNREGA, Minister Sadhvi Niranjan Jyoti says, ‘I am a saint, you are facing repercussions’
மக்களவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) செயல்படுத்துவது தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மத்திய அரசும் செவ்வாய்க்கிழமை வாதிட்டனர். அதில் கிராமப்புற மேம்பாட்டு இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அரசியல் விளையாட்டு விளையாடுவதாகக் குற்றம்சாட்டினார்.
மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, தான் ஒரு துறவி என்றும், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக எதிர்க்கட்சிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தி.மு.க எம்.பி கனிமொழி, காங்கிரஸ் தலைவர் சசி தரூர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய் ஆகியோர் கேள்வி நேரத்தின் போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான பிரச்சனைகளை எழுப்பினர்.
இந்த திட்டத்தின் கீழ் உறுதியான 100 நாள் வேலை கிடைக்காதது குறித்தும், வேலை கிடைக்காவிட்டாலோ அல்லது ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலோ வேலையில்லாத திண்டாட்டம் ஏற்படுவது குறித்து கனிமொழியும், சசி தரூரும் கேள்வி எழுப்பினர்.
இருப்பினும், பந்தோபாத்யாய் மீண்டும் மேற்கு வங்கத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்தாத பிரச்சினையை எழுப்பினார். ஒரு சில கிராமங்களில் முறைகேடுகள் நடப்பதை மத்திய அரசு கண்டறிந்தால், அந்த கிராமங்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தலாம், ஆனால், முழு மாநிலத்திற்கும் பணம் கொடுப்பதை நிறுத்துவது நியாயமற்றது என்றும் அவர் கூறினார்.
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி பந்தோபாத்யாய, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கைக் குறிப்பிட்டு பேசுகையில், அமைச்சர் கிரிராஜ் சிங் டி.எம்.சி எம்.பி.க்களை இந்தப் பிரச்சினையில் சந்திக்கச் சொன்னார். ஆனால், அவர் ஆஜராகவில்லை என்றும், அவர்கள் மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியைச் சந்திக்கச் சென்றபோது, அவர் அவர்களைக் காத்திருக்கச் செய்தார். ஆனால், அவர் சந்திக்கவில்லை என்றும் கூறினார்.
அதன்பிறகு, தனது கேள்விக்கு சாத்வி நிரஞ்சன் ஜோதி பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட விதம்… அவர்கள் முதலில் 5 பேருக்கு நேரம் கேட்டனர், பின்னர் அவர்கள் எங்களுக்கு 10 பேர் என்றார்கள், நான் ஒப்புக்கொண்டேன்… பின்னர் அவர்கள் மக்களைச் சந்திப்போம் என்று சொன்னார்கள்… உங்கள் பிரதிநிதிகளைப் பெறுங்கள் என்று சொன்னேன்… நான் இரண்டரை மணி நேரம் காத்திருந்தேன். … ஆனால், அவர்கள் சந்திக்க தயாராக இல்லை” என்று சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறினார்.
மேலும், “அவர்கள் மேற்கு வங்க மக்களைப் பற்றி கவலைப்படவில்லை, அவர்கள் அரசியல் செய்ய விரும்புகிறார்கள். என்னைப் பொய் சொல்பவர் என்பார்கள். மஹுவா மொய்த்ரா, நான் ஒரு பாவி என்கிறார்... நான் ஒரு துறவி, அவர்கள் பின்விளைவுகளை சந்திக்கிறார்கள்” என்று சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறினார்.
இந்த விவாதம் எல்லாம் தி.மு.க எம்.பி கனிமொழி, கிராமப்புற வேலைவாய்ப்பின்மை குறித்து கேள்வி எழுப்பியதில் இருந்து தொடங்கியது.
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் சராசரி வேலைவாய்ப்பு 50 நாட்களுக்கு குறைவாக இருப்பதால், 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்ய அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது? சரியான நேரத்தில் பணம் செலுத்தப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் என்ன செய்கிறது? பல மாநிலங்களில் கொடுப்பனவுகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தாமதமாகின்றன. சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி தாமத கொடுப்பனவு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா?” என்று கனிமொழி கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி, இந்த பிரச்னை உத்தரப் பிரதேசத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பானது என்றும், அதற்கான பதிலை பின்னர் தி.மு.க எம்.பி-யிடம் தெரிவிப்பதாகவும் கூறினார். இந்த கேள்வி உ.பி-யுடன் தொடர்புடையது என்றும் அமைச்சர் நாடாளுமன்ற அவையில் பதிலளிக்க வேண்டும் என்றும் கனிமொழி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சருக்கும் தனக்கும் இதே பிரச்னை என்று சசி தரூர் எழுந்து பேசினார், “குறிப்பிட்ட கேள்வி உ.பி. பற்றி இருக்கலாம், ஆனால் நாம் கொள்கை பற்றி கேட்கலாம்” என்று அவர் கூறினார்.
ஒரு விண்ணப்பத்திற்கு எதிராக 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால், விண்ணப்பதாரர் வேலையின்மை உதவித்தொகைக்கு தகுதியுடையவர் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் திட்டம் சட்டத்தை மேற்கோள் காட்டினார். கேரளாவும் இதே பிரச்சனையை சந்தித்து வருவதாகவும், பல மாநிலங்களில் வேலை கிடைக்காததால் மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
“தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு மாநிலங்களுக்கு பணம் செலுத்துகிறதா?” சசி தரூர் கேள்வி எழுப்பினார்.
இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், “2014 வரை 1,660 வேலை நாட்கள் மட்டுமே (காங்கிரஸால்) வழங்கப்பட்டன... இப்போது 2,700 வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் வரவு செலவுத் திட்டம் மாநில அரசால் தயாரிக்கப்பட்டு, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கிறது. மத்திய அரசில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“