New Update
/indian-express-tamil/media/media_files/pMphUOgx3960rS5LBZPB.jpg)
டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
Rahul Gandhi | எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் தங்கள் ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து "அச்சுறுத்தல் அறிவிப்புகள்" கிடைத்ததாகக் கூறியுள்ள நிலையில், "அரசின் ஆதரவுடன் கூடிய ஸ்பைவேர் தாக்குதல்" குறித்து ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
கே.சி.வேணுகோபால், சத்தீஸ்கர் துணை முதல்வர் டி.எஸ். சிங் தியோ, பவன் கேரா, சுப்ரியா ஷிரினேட் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த எச்சரிக்கையை பெற்றுள்ளனர்.
அதாவது, காங்கிரஸின் சசி தரூர், ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா, டிஎம்சியின் மஹுவா மொய்த்ரா, சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி மற்றும் ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதீன் ஒவைசி ஆகியோர் இந்த அறிவிப்பை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நாங்கள் பயப்பட மாட்டோம். ஏனெனில் நாங்கள் போராளிகள். எனவே, பின்வாங்க மாட்டோம்.
இதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டல்ல. உங்களுக்கு எனது போன் வேண்டும் என்றால் நானே தருகிறேன்” என்றார். தொடர்ந்து, “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விட அதானி இப்போது நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த நபராக உள்ளார்” என்றார்.
மேலும், “கூண்டில் அடைக்கப்பட்ட கிளிக்குள் அரசனின் உயிர் இருந்த பழையை கதையை போல் நடக்கிறது. நரேந்திர மோடியின் ஆன்மா அதானி.
ஆன்மா வேறு எங்கோ இருப்பதால் மோடியை நாம் எவ்வளவு தாக்கினாலும் பலன் இல்லை. இப்போது நாம் இதை புரிந்து கொண்டோம். ஆன்மா கிளியில் இருப்பதைப் புரிந்து கொண்டு இப்போது ஆன்மாவைத் தாக்குகிறோம். அதனாலதான் இதெல்லாம் நடக்குது” என்றார்.
தொடர்ந்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு, “இல்லை” எனப் பதிலளித்தார்.
இதையடுத்து, “என்ன நடக்கிறது என்பதை மக்களுக்குப் புரிய வைப்பதே எதிர்க்கட்சியாகிய எங்கள் வேலை, மேலும் மேலும் மக்கள் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
மேலும், "இது தெளிவாக பீதியின் அறிகுறியாகும். இது ஒரு நபர் மட்டுமல்ல. இதுதான் முழு எதிர்க்கட்சி” என்றார். தொடர்ந்து, 'திருடர்கள் மற்றும் குற்றவாளிகள் மட்டுமே இதைச் செய்ய விரும்புவார்கள்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.