எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்று (ஜூலை 17) நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள கூட்டத்தில் பா.ஜ.க அல்லாத 24 கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். கூட்டம் குறித்து மனோஜ் சி.ஜி மற்றும் மல்லிகா ஜோஷி கூறுகையில், கடந்த மாதம் பாட்னாவில் முதல் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் அடுத்த கட்டமாக இன்று பெங்களூருவில் மற்றொரு கூட்டம் நடைபெறுகிறது என்று கூறினர்.
மேலும், மனோஜ் மற்றும் மல்லிகா கூறுகையில்,
- இன்றைய கூட்டத்தில் தொகுதி பங்கீடு, அதிக ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை இருக்கும்.
- குழுவிற்கு ஒரு முறையான பெயரைக் கொடுக்கலாமா மற்றும் ஒரு பொதுவான திட்டத்தை உருவாக்கலாமா என்பது குறித்தும் கட்சிகள் விவாதிக்கும், ஆனால் அவை இரண்டு விஷயங்களிலும் பிளவுபட்டதாகத் தெரிகிறது.
- கூட்டத்திற்குப் பிறகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா வழங்கும் விருந்தில் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
- திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றாலும், அவர், மருமகனும், மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மற்றும் பிற உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. சோனியா காந்தியும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கிறார். அவரது வருகை எதிர்க்கட்சிகள் ஒற்றுமை முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆர்.எல்.டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி மற்றும் எஸ்.பி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பெங்களூரு கூட்டத்தில் முதல்முறையாக சந்திக்க உள்ளனர். இரு தரப்புக்கும் சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
டெல்லி அவசரச் சட்டம்
டெல்லி அரசின் குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை எதிர்ப்போம் என்று காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து பெங்களூருவில் இன்று தொடங்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“