மத்திய அரசின் அவசரச் சட்டம்: காங். நிலைப்பாடு என்ன? எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி நிபந்தனை

ஆம் ஆத்மி-யின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தில், உள் விவாதங்களுக்குப் பிறகு அவசரச் சட்டம் குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக காங்கிரஸ் கூறியது. ஆனால், இன்னும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

ஆம் ஆத்மி-யின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தில், உள் விவாதங்களுக்குப் பிறகு அவசரச் சட்டம் குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக காங்கிரஸ் கூறியது. ஆனால், இன்னும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
AAP opposition meeting, AAP congress opposition meeting, மத்திய அரசின் அவசரச் சட்டம், காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி நிபந்தனை, AAP congress conflict, AAP opposition meeting bengaluru, AAP monsoon session, parliament monsoon session, Indian Express

அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தில், உள் விவாதங்களுக்குப் பிறகு அவசரச் சட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக காங்கிரஸ் கூறியது. ஆனால், இன்னும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

Advertisment

தலைநகர் டெல்லி குறித்து மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட 'சேவைகள்' கட்டுப்பாட்டில் உள்ள அவசரச் சட்டம் குறித்து காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாவிட்டால், அடுத்த வாரம் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்காது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் கருத்துப்படி, கடந்த மாதம் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தில், உள் விவாதங்களுக்குப் பிறகு அவசரச் சட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக காங்கிரஸ் கூறியது.

“காங்கிரஸ் தலைவர்கள் கட்சிக்குள் விவாதங்களுக்குப் பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும், மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பு தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார்கள் என்றும் கூறினார்கள். ஆனால், அது இன்னும் நடக்கவில்லை” என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கூறினார்.

Advertisment
Advertisements

இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது. பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஆம் ஆத்மி எதிர்பார்த்த வழியில் செல்லவில்லை. இந்த அவசரச் சட்டத்தை எதிர்ப்பதில் காங்கிரஸ் உறுதியான உத்தரவாதம் அளிக்க வில்லை என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், ஆம் ஆத்மி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியைத் தாக்கிய விவகாரத்தை காங்கிரஸ் கட்சி எழுப்பியது.

ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு மூத்த தலைவர், இந்த அவசரச் சட்டத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டை காங்கிரஸ் விரைவில் வெளியிடும் என்று நம்புகிறோம் என்றார். “எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்வது அல்லது தவிர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம். ஆனால், நாங்கள் கலந்துகொள்கிறோம் என்பது காங்கிரஸையும், அது இறுதியில் எடுக்கும் முடிவையும் பொறுத்தது” என்று ஆம் ஆத்மி தலைவர் கூறினார்.

இதற்கிடையில், ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க விரும்புவதாக எழுதிய கடிதத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுவரை பதிலளிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியின் டெல்லி மற்றும் பஞ்சாப் பிரிவுகள் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைவதற்கான யோசனைக்கு எதிராகவும் பல காங்கிரஸ் தலைவர்கள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிக்க தயக்கம் காட்டுகின்றனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Congress Aam Aadmi Party

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: