/tamil-ie/media/media_files/uploads/2018/12/a58.jpg)
Opposition Meet Live Updates
Opposition Meeting Today in Delhi: 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் திரண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் மிகப்பெரிய அணியைத் திரட்டும் முயற்சியில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவினரோ, இந்தக் கூட்டத்தை நக்கலுடன் விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கூறுகையில், “எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரள்வது பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், முதலில் எதிர்க்கட்சிகள் தங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கட்டும். எங்களிடம் பிரதமர் மோடி உள்ளார், எதிர்க்கட்சிகள் யாரைப் பிரதமராக நிறுத்தப்போகிறார்கள்” எனக் கிண்டல் செய்தார்.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள கட்சித் தலைவர்களின் புகைப்படத் தொகுப்பு இதோ,
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஒருங்கிணைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தலைவர்கள்
கூட்டத்திற்கு வருகை தந்த அந்நாள் காங்கிரஸ் தலைவர் சோனியா, இந்நாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியுடன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
படங்கள் : Tashi Tobgyal
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.