எதிர்க்கட்சிகளின், இந்தியா கூட்டணியின் 21 எம்.பி.க்கள் கொண்ட பல கட்சி பிரதிநிதிகள் குழு, இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்து,
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ’கவர்னரே தனது வருத்தத்தை தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களில் நாங்கள் கவனித்த அனைத்து விஷயங்களையும் அவர் முன் வைத்தோம், அவர் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
குக்கி அல்லது மெய்தி, அனைத்து சமூகங்களின் தலைவர்களிடமும் நாம் அனைவரும் பேசி, தீர்வுக்கான வழியைக் கண்டறிய வேண்டும். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மணிப்பூருக்கு வந்து அனைத்து சமூகத் தலைவர்களுடன் பேச வேண்டும்’ என்று ஆளுநர் அறிவுறுத்தினார்.
ஏனெனில் மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அவநம்பிக்கையின் சூழ்நிலையை அனைவரும் ஒன்றாகக் கையாள வேண்டும், என்று சவுத்ரி கூறினார்.
மேலும் மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என ஆளுநரிடம் எம்.பி.க்கள் மனு ஒன்றையும் அளித்தனர்.
முன்னதாக மே 4 அன்று மணிப்பூரில் ஒரு கும்பலால் நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் மற்றும் அவரது தாயாரை சந்தித்ததாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் கூறினார்.
சம்பவத்தின் போது கொல்லப்பட்ட தனது மகன் மற்றும் கணவரின் உடல்களையாவது பார்க்க உதவுமாறு அந்த தாய் கோரிக்கை விடுத்தார். இதை ஆளுநரின் கூட்டத்தில் எழுப்புவோம் என்றார் சுஷ்மிதா தேவ்.
இக்குழு இரண்டு நாள் பயணமாக மாநிலம் வந்துள்ளது. மணிப்பூரில் இனக்கலவரம் இந்தியாவின் இமேஜை சேதப்படுத்தியதால் அரசியல் செய்ய நாங்கள் மாநிலத்துக்கு வரவில்லை என்று சௌத்ரி சனிக்கிழமை தெளிவுபடுத்தினார்.
இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதியை சீக்கிரம் மீட்டெடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்... மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை முழு உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது, என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“