எதிர்க்கட்சிகள் ராஜ்ய சபாவை பல நாட்கள் முடக்கிய பின்னர், வியாழக்கிழமை சற்று இறங்கி வந்திருக்கின்றன. விதி 267-ன் கீழ் மணிப்பூர் மீது விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டு, அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி அரசாங்கத்தை நோக்கி மற்றொரு அஸ்திரத்தை வீசியுள்ளன.
ஒரு பிரேரணையை உள்ளடக்கிய, ஒரு விதியின் கீழ் அரசாங்கம் விவாதத்தை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த வார்த்தைகள் அடுத்து சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். இறுதியில், வியாழக்கிழமையும் முட்டுக்கட்டை தொடர்ந்தது, மேலும் அவை நடவடிக்கைகள் இடையூறு ஏற்பட்டன.
எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டு காலையில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைத் தொடர்ந்து, சில காங்கிரஸ் தலைவர்கள் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டுவர நடுநிலை வழிக்கு அழைப்பு விடுத்தனர். குறைந்த பட்சம் ஒரு மூத்த தலைவராவது, முக்கியமான மசோதாக்கள் உட்பட மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இந்த முட்டுகட்டையைப் பயன்படுத்துவதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் விமர்சன கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறியதாகத் தெரிகிறது.
ராஜ்யசபா கூடிய உடனேயே, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் சபையில் கூறினார்: “விதி 267 மற்ற விதிகளை மீறும் என்று நாங்கள் நம்பினாலும்… ஆனால், அது பிரச்சினை இல்லை. பிரச்சனை என்னவென்றால், நாட்டின் மக்கள் மணிப்பூரில் எங்களின் கருத்தைக் கேட்க விரும்புகிறார்கள் (மற்றும்) எதிர்க்கட்சியாகிய நாங்கள் இந்த விவாதத்தை விரும்புகிறோம். ஈகோ அல்லது ஆணவத்தைக் காட்ட நாங்கள் இங்கு வரவில்லை. இந்த முட்டுக்கட்டை யாருக்கும் உதவாததால், தீர்வுக்காக நான் உங்கள் மூலம் சபைத் தலைவரிடம் முறையிடுகிறேன். மணிப்பூரைப் பற்றி ஆறு முதல் எட்டு மணி நேரம் விவாதிக்க வேண்டும். ஒரே தேசம் என்ற உணர்வில் அதைப் பற்றி விவாதிப்போம்.” என்று கூறினார்.
இருப்பினும், ராஜ்ய சபாவில் சலசலப்பு தொடர்ந்த நிலையில், ராஜ்ய சபா தலைவர் ஜெகதீப் தன்கர், ஒரு வழியைக் கண்டுபிடிக்க அவைத் தலைவர்களைச் சந்திப்பதாகக் கூறினார்.
அரசாங்கத்தின் அவை மேலாளர்கள் - ராஜ்யசபா அவைத் தலைவர் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி - எதிர்க்கட்சிகள் ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் கூடினர்.
இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள், “பொது நலன் சார்ந்த விஷயத்தைப் பற்றிய விவாதம்” என்ற விதி 167-ன் கீழ் அரசு விவாதம் நடத்த வேண்டும் என்று முறைப்படி முன்மொழிந்தனர். 2002ல் குஜராத் கலவரம் தொடர்பாக விதி 167ன் கீழ் நடைபெற்ற விவாதத்தின் உரையையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசு தரப்பில் காட்டினார்கள்.
விதி 267-த் தூண்டும் விவாதத்திற்கான கோரிக்கையை எதிர்க்கட்சி கைவிடத் தயாராக உள்ளது - இது மற்ற நடவடிக்கைகளை இடைநிறுத்தும் விவாதத்தை ஏற்படுத்தும் - இதற்கு முன்னதாக பிரதமரின் அறிக்கை பியூஷ் கோயல் மூலம் வெளியிடப்படும். எதிர்க்கட்சி வட்டாரங்களின்படி, கொள்கையளவில் இது ஒரு நல்ல யோசனை என்று அவர்களிடம் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு சபையில் முன்வைக்கப்படும் பிரேரணையின் வரைவை ஏற்கனவே தயாரித்துவிட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்க்கட்சித் தலைவர்கள் பியூஷ் கோயல் மற்றும் ஜோஷியிடம் விவாதத்தை உடனடியாக எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், அமைச்சர்கள் அவர்களிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை மக்களவையில் டெல்லி தலைநகர் பிரதேச (என்.சி.டி) மசோதா பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததால் கிடைக்கவில்லை தெரிவித்தனர்.
இதன் விளைவாக விவாதம் விரைவில் நடக்காது. வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை பிற்பகல் தனிப்பட்ட உறுப்பினர் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதால் நீண்ட விவாதம் சாத்தியமில்லை. திங்கள்கிழமை, ராஜ்யசபாவில் என்.சி.டி மசோதாவை எடுத்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கும்.
ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கூறுகையில், “உள்துறை அமைச்சரின் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலைக் காரணம் காட்டி அரசாங்கம் சாக்கு போக்கு கூறுகிறது.” என்று கூறினார்.
விதி 267 குறித்து எதிர்க்கட்சிகள் ஏன் வேண்டாம் என்று கூறுகிறார்கள் கேட்டதற்கு, ஒரு தலைவர் கூறினார்: “நாம் மட்டும் ஏன் அவை முட்டுக்கட்டைக்கு பொறுப்பேற்க வேண்டும்?… உண்மையில், நாங்கள் விரும்பிய இடத்தில் அவற்றை அடைந்தோம். நாங்கள் அவர்களுக்கு ஒரு நடுநிலை வழியைத் தீர்வாக வழங்கினோம். ஆனால், அவர்களால் உடனடியாக ஒரு விவாதத்தைத் தொடங்க முடியவில்லை.” என்று கூறினார்.
பிரதமரின் அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு, ஒரு தலைவர் கூறினார்: “மோடி பின்னர் வரலாம். விவாதத்தை ஆரம்பிக்கலாம்.” என்று கூறினார்.
இருப்பினும், இந்த கோரிக்கையை கைவிடுவதில் காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட ட்வீட்டில் எதிர்க்கட்சிகள் “நடுநிலை வழியைத் தீர்வாக வழங்கியுள்ளன, கார்கே செய்தியாளர்களிடம் "நடுநிலை வழி இல்லை, ஒரே ஒரு பாதை மட்டுமே … அதாவது, பிரதமர் அறிக்கை வெளியிட வேண்டும்” என்று கூறினார்.
அரசுடன் உடன்பாடு எட்டப்படாததால், எதிர்க்கட்சித் தலைவர்கள் தன்கர் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பின்னர், பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியதும், பிரதமர் அவையில் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தனது சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், “நாங்கள் இலக்கை அடைவதற்காக இருக்கிறோம்” என்ற நிலைக்கு வந்துள்ளதாக தன்கர் கூறினார். “எதிர்க்கட்சிகளுடன் நான் பல கூட்டங்களை நடத்தியுள்ளேன். நான் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்” என்று ராஜ்ய சபா தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.