Advertisment

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி நீக்கத் தீர்மானம் : எதிர்க்கட்சிகள் முயற்சி ஜெயிக்குமா?

நாட்டில் முதல் முறையாக தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Apr 20, 2018 14:29 IST
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி நீக்கத் தீர்மானம் : எதிர்க்கட்சிகள் முயற்சி ஜெயிக்குமா?

நேற்று வெளியான நீதிபதி லோயா மரணம் குறித்த தீர்ப்பு டெல்லியில் பெரும் சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

குஜராத்தில் கடந்த 2005ம் ஆண்டு, சொராபுதீன் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் மர்மமான முறையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இவர்களின் மரணத்திற்கு குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா உட்பட 23 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.  நீதிபதி பி.எச்.லோயா வழக்கை விசாரித்து வந்தார். அப்போது கடந்த 2014ம் ஆண்டு  திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றிற்கு சென்றிருந்த   நீதிபதி  லோயா மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக  குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, அவரது மரணம் குறித்து  சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.  அதில், “ நீதிபதி லோயா மரணம் இயற்கையாக நடந்துள்ளது.  லோயாவுடன் பொறுப்பில் இருந்த நீதிபதிகள் அளித்த அறிக்கைகள் மீது எந்த சந்தேகமும் இல்லை. மனுதாரர்களின் முயற்சியானது நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல். சுதந்திரமான விசாரணை கேட்பது நீதித்துறை மீதான தாக்குதல். அரசியல் போட்டிகள் ஜனநாயக அரங்கில் தீர்க்கப்பட வேண்டும். இது நீதித்துறைக்கும் எதிரான ஒன்றாகும்.

இந்த வழக்கில் தற்போது இருக்கும் விசாரணை தொடந்து நடைபெறும். மேலும் நீதிபதி லோயா மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் இந்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துவிட்டன. லோயா மரணத்தில் சிறப்பு விசாரணை தேவை இல்லை ”என்று தெரிவித்திருந்தது.  இந்த தீர்ப்பை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிருந்தது.

இந்நிலையில், இந்த பொதுநல வழக்கின் பின்புலத்தில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் உள்ளதாக பாஜவினர் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் தீர்ப்பு வெளியானது குறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா,” இந்திய வரலாற்றில் மோசமான பதிவு கொண்ட நாள் இது. லோயா மரணத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் மீது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு அவதூறு அரசியல் மற்றும் அசிங்க அரசியல் செய்யும் பாஜ.வின் செயல் கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியர்கள் மிகத்திறமையானவர்கள். பாஜ.வில் இருக்கும் எம்.பி.க்கள் உட்பட பெரும்பாலான இந்தியர்கள், அமித்ஷா பற்றி அறிந்து வைத்துள்ளார்கள். அவரைப் போன்றவர்களை உண்மை தன்னுடைய வழியில் பிடிக்கும்” என்று கூறியிருந்தார்.

,

ராகுல் காந்தியின் இந்த பதிவிற்கு பிறகு, நீதிபதி லோயா மரண வழக்கு குறித்து தவறான தகவல்களை பரப்பிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம்  எதிர்க்கட்சி எம்பிக்கள் 64 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இதுக் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், நீதிபதி லோயா மரணம் குறித்த வழக்கில்  உண்மை மறைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். துணை குடியரசு தலைவரிடம் வழங்கப்பட்ட மனுவில் நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்க வலியுறுத்தி காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் , தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 64 எம்பிக்கள் கையெழுத்திட்டியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் முதல் முறையாக தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.  ஆனால் அதே சமயத்தில் உச்ச நீதிமன்ற  நீதிபதியை  பதவி நீக்க வேண்டும் என்றால் கீழ்க்கண்ட விதிமுறைகள் கையாள வேண்டும்.,

1.முதலில் 100 லோக்சபா அல்லது 50 ராஜ்யசபா எம்.பி.,க்கள் கையெழுத்து போட வேண்டும்

2.பின்பு, இதனை அவை தலைவர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்

3.ஒரு வேலை ஏற்று கொள்ளப்பட்டால், விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.

4.விசாரணையில் நீதிபதி தவறு செய்திருந்தால் நிருபிக்கப்பட்டால், தீர்மானம் கொண்டு வரப்படும்

5.3 ல் 2 பங்கு ஆதரவு கிடைத்தால் தீர்மானம் நிறைவேறும்

6.தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதிக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

7. அவர் ஒப்புதல் அளித்தால் நீதிபதி பதவி பறிக்கப்படும்.

எதிர்க்கட்சிகளுக்கு தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு லோக்சபாவில் பலம் இல்லாததால், இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்றம் ஏற்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

 

#Judge Loya #Dipak Mishra #Supreme Court Of India #Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment