Advertisment

கேரளாவில் இருந்து வங்காளம் வரை : அகில இந்திய என்.ஆர்.சியை எதிர்க்கும் தலைவர்கள்

மம்தா பானர்ஜி : வங்காளத்தை வகுப்புவாத அடிப்படையில் பிரிப்பது எளிது என்று யாராவது நினைத்தால், அவர் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கேரளாவில் இருந்து வங்காளம் வரை : அகில இந்திய என்.ஆர்.சியை எதிர்க்கும் தலைவர்கள்

புதன்கிழமை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எப்போதெல்லாம் நாட்டில் என்.ஆர்.சி நடைமுறை படுத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் அசாமில் என்.ஆர்.சி புதிப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்திய அளவில் என்.ஆர்.சி முறையை செயல்படுத்தும் நடைமுறையை  எதிர்க்கட்சிகளும்,  எதிர்கட்சி ஆட்சி செய்யும் மாநில அரசாங்கங்களும் கண்டனங்கள தெரிவித்து வருகின்றன.

Advertisment

பாஜக அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை  முன்னின்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்த்து வருபவராவார் . நேற்று முர்ஷிதாபாத்  மாவட்டத்தின் சாகர்டிகியில்  நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது,"என்.ஆர்.சி.செயல்முறையை மேற்குவங்க மாநிலத்தில் செயல்படுத்த தனது அரசாங்கம் அனுமதிக்காது"

மேலும்,"அப்போதைய, பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் வெளிப்பாடாக அசாமின் என்.ஆர்.சி புதுப்பிக்கப்பட்டதாகவும், இதே செயல்முறையை இந்திய நாடுமுழுவதும் செயல்படுத்த முடியாது.  ஒரு மனிதரின் குடியுரிமையைப் பறித்து, அதே நாட்டில் அவரை எப்படி அகதியாக மாற்ற முடியும்?  என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

திரிணாமுல் காங்கிரஸின் தலைவரான இந்த மம்தா பானர்ஜி, யாரின் பெயரையும்  வெளிப்படையாக சொல்லாமல்," என்.ஆர்.சி செயல்முறை வங்காளத்தில் மேற்கொள்ளப்படும் என்ற கூறிவருவதன் மூலம் மாநிலத்துக்குள் பிரச்சனையைத் தூண்டி பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். என்.ஆர்.சி ஒருபோதும் வங்காள மாநிலத்துக்குள் நுழையாது என்பதை நான் இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன், மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்க யாரையும் இங்கு அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.

மத அடிப்படையில் மாநிலத்தை பிளவுபடுத்த ஒரு சதி நடந்து வருவதாக கூறிய பானர்ஜி,"வங்காளத்தை வகுப்புவாத அடிப்படையில் பிரிப்பது எளிது என்று யாராவது நினைத்தால், அவர் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்" என்றார்.

அசாமில் நடத்தப்பட்ட என்.ஆர்.சி புதுப்பித்தல் செயல்முறையில்  இந்துக்கள், வங்காளிகள், முஸ்லிம்கள், கோர்காக்கள் என 19 லட்சம் மக்கள் விடுவிக்கப்பட்டு தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வங்காளத்தில், நாங்கள் (டி.எம்.சி) எந்தவொரு தடுப்பு மையத்தையும், எப்போதும்  அனுமதிக்க மாட்டோம்,” என்று கூறினார்.

என்.ஆர்.சி செயல்முறையை நாடுமுழுவதும் செயல்படுத்த வேண்டும்  என்ற அமித் ஷாவின் கருத்து மிகவும் ஆபத்தானது என்று கேரளா சிறுபான்மையினர் மற்றும் உயர் கல்வி நலத்துறை அமைச்சர் கே டி ஜலீல் கூறினார். அசாமில் மேற்கொள்ளப்பட்ட என்.சி.ஆர் செயல்முறையை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை இருக்கும்போது, ​​நாடு முழுவதும் இந்த செயல்முறையை, உள்துறை அமைச்சர் எவ்வாறு நடைமுறைப் படுத்த முடியும் என்றார்.

மற்ற நாடுகளிலிருந்து வந்து தங்கிய அனைத்து இஸ்லாமியர்கள்  இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அவர் கூறியது எனக்கு புரிகிறது, ஆனால், இந்தியா போன்ற ஒரு மதசார்பற்ற தேசத்தில், இஸ்லாமியர்களை விலக்குவதற்கான கடைபிடிக்கும் இந்த அரசின் அணுகுமுறையை புரிந்துகொள்வது கடினமாக இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், "பங்களாதேஷில் இருந்து குடியேறியவர்கள் வாழ்கை முறையை நாம் கவனித்து பார்த்தோமென்றால், மத அடையாளத்தை விட தங்கள் கலாச்சார அடையாளத்திற்கு தான் முன்னுரிமைக் கொடுத்திருப்பார்கள். மத அடையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், முதலில் அவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கக் கூட  மாட்டார்கள். பன்முகத்தன்மையோடு கூடிய  வாழ்க்கையை ஏங்கிக்கொண்டிருந்த அவர்கள், தங்கள் மத அடையாளத்தை கடைசி வரை கையில் எடுக்கவே இல்லை. இந்திய தேசம் இவர்கள் போன்றவர்களை ஊக்குவிக்க வேண்டும் . அவர்கள், நம் இதயத்திற்கு நெருக்கமானவர்கள்" என்றும் கூறினார்.

மத்தியப் பிரதேச அமைச்சர் ஆரிஃப் அகீல் இது குறித்து கூறுகையில், “சிறுபான்மையினரை துன்புறுத்துவதே ஒரே நோக்கம், வேறு ஒன்றும் இல்லை” என்றார்.

அசாம்  மாநிலக் காங்கிரஸ் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான ரிபுன் போரா இது குறித்து கூறுகையில்,“அசாமில் என்.ஆர்.சி மீண்டும் செய்யப்படும் என்ற அமித் ஷாவின் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது. அகில இந்தியா என்.ஆர்.சி பற்றிய அமித் ஷாவின் கருத்து வேறு தளத்தில் விவாதிக்கப்பட வேண்டும். ஆனால், அசாமில்  இந்த விவாதமே சாத்தியமற்றது. தற்போது வெளியிடப்பட்ட  அசாம் என்.ஆர்.சி உருவாக்கப்பட்ட சூழ்நிலை வேறு. வெளிநாட்டினர்  தீர்ப்பாயங்களை உடனடியாக செயல்படுத்தி, பட்டியலில் இருந்து விடுபட்ட உண்மையான நாட்டின் குடிமக்கள் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை ஏற்பாடு செய்யும் கடமையை இந்த அரசு முதலில் நிறைவேற்ற வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

Assam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment