Advertisment

மீடியா ஒன் விவகாரம்: அமித் ஷாவிடம் செல்லுங்கள்... கேரள எம்.பி.க்களுக்கு சொன்ன தாகூர்

அனுராக் தாக்கூரை சந்தித்த கேரள எம்.பி.க்கள், அவரது அலுவலகத்திலும், உள் துறை அமைச்சகத்திடமும் மனு அளித்தனர்

author-image
WebDesk
New Update
மீடியா ஒன் விவகாரம்: அமித் ஷாவிடம் செல்லுங்கள்... கேரள எம்.பி.க்களுக்கு சொன்ன தாகூர்

பிரபல ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பங்குதாரர்களாகவுள்ள மீடியா ஒன் என்ற மலையாள சேனலுக்கான ஒளிபரப்பு உரிமத்தை மத்திய அமைச்சகம் ரத்து செய்த ஒரு நாளுக்குப் பிறகு, கேரளாவைச் சேர்ந்த பத்து மக்களவை எம்.பி.க்கள், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து பேசினர்.

Advertisment

சேனலுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க மறுத்தது உள் துறை அமைச்சகம் என்பதால், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்குமாறு எம்.பி.க்களுக்கு தாக்கூர் அறிவுறுத்தினார்.

எம்.பி.க்களில் காங்கிரஸைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ், கே.சுதாகரன் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் என்.கே.பிரேமச்சந்திரன் ஆகியோர் இடம்பெற்றனர். என்சிபியின் சுப்ரியா சுலே, திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா, ஐயுஎம்எல்லின் இடி முகமது பஷீர், மற்றும் காங்கிரஸின் திக்விஜய சிங் ஆகிய எம்.பிக்கள் போட்டி கட்சியினராக இருந்தாலும், மீடியா ஒன்னுக்கு தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர்.

திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜனநாயகத்தில் மக்கள், ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் குரல்கள் கேட்கப்பட வேண்டும். கருத்து வேறுபாடு, விவாதம் மற்றும் உரையாடல்களை அமைதிப்படுத்துவது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆரோக்கியமற்றது என குறிப்பிட்டிருந்தார். ஆனால், எந்தவொரு விமர்சனத்துக்கும் தாகூர் பதிலளிக்கவில்லை.

மீடியாஒன் நியூஸுக்கு அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் உரிமம் ரத்து செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிராக கேரளாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் தாக்கூர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்திற்கு மெமோராண்டம் சமர்ப்பித்தனர்.

பஷீர், ஹிபி ஈடன், அப்துஸ்ஸமத் சமதானி, என் பிரதாபன், அடூர் பிரகாஷ், டீன் குரியகோஸ் மற்றும் ராஜ்மோகன் உன்னிதன் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

குழுவிற்கு தலைமை தாங்கிய சுரேஷ், தி இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு கூறியதாவது, " பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, மீடியா ஒன் விவகாரம் தொடர்பாக ஏழு முதல் எட்டு எம்பிக்களை தாகூரை சந்தித்தோம். முதலில் அவைக்குள் சந்தித்து பேசினோம். பின்னர் வெளியே வளாகத்தில், அவருடன் விரிவாக விவாதித்தோம். இந்த நடவடிக்கை I&B அமைச்சகத்தால் எடுக்கப்படவில்லை. எனவே, நாங்கள் இதற்கு பொறுப்பல்ல.பாதுகாப்பு காரணங்களுக்காக சேனலின் உரிமத்தை புதுப்பிக்க வேண்டாம் என்று உள்துறை அமைச்சகம் I&B யிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக நீங்கள் உள்துறை அமைச்சரை தான் சந்திக்க வேண்டும். அவர் முடிவு எடுப்பார். ரத்து செய்வதை வாபஸ் பெறச் சொன்னால், உடனே வாபஸ் பெறுவோம்.ஐ.பி அமைச்சகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறினார்.

இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உள் துறை அமைச்சரை அவரது அறையில் சந்திக்க முயற்சித்தோம். ஆனால், அவர் பிஸியாக இருப்பதாக நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து, மெமோராண்டம் அமைச்சரின் ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒரு சந்திப்புக்கூட உள் துறை அமைச்சகம் ஏற்படுத்தவில்லை என தெரிவித்தார்.

RSP இன் பிரேம்சந்திரன் கூறுகையில், மீடியா ஒன் சேனலுக்கு தடை விதித்தது நியாயமற்றது. உள் துறை அமைச்சகம் அவர்களிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும் அல்லது புகார் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியிருக்கலாம். ஆனால், அப்படி செய்யவில்லை என தெரிவித்தார். கேரள எம்.பி.க்களை சந்தித்தது குறித்து கருத்து தெரிவிக்க தாக்கூர் முன்வரவில்லை.

தாக்கூருக்கு அளித்த மெமோராண்டமில், "அமைச்சகத்திடம் உரிமத்தை புதுப்பிக்கும் பணியில் சேனல் ஈடுபட்டுள்ளது. அதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

2013 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஊடக நிறுவனத்தை தடை செய்திருப்பது அமைச்சகத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாகும். தண்டனைக்கு முன் அவர்கள் தரப்பு விவாதத்தை கேட்க வேண்டும் என்ற இயற்கை நீதியின் அடிப்படைக் கொள்கை இங்கே அப்பட்டமாக மறுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment