2024 பொதுத் தேர்தல்; பாஜகவிற்கு எதிராக ஒரே அணியில் திரளும் முக்கிய எதிர்க்கட்சிகள்

Opposition unity for 2024 on menu, SAD, BJD, TDP join dinner meeting: பாஜகவை சேராத பெரிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ்வாடி கட்சி மட்டும் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை.

Manoj C G

எட்டு, லுட்யென்ஸின் டெல்லியின் மையத்தில் உள்ள டீன் மூர்த்தி லேன், ஒரு காலத்தில் பல மூன்றாம் முன்னணி உருவாக்கும் முயற்சிகளின் மையமாக இருந்தது. சிபிஎம்மின் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் வாழ்ந்த வீடு திங்கள் கிழமை மீண்டும் உயிர்ப்பு பெற்றது. பாஜகவை சாராத அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒன்றாக சேர்ந்து, தற்போது அந்த வீட்டில் வாழ்ந்து வரும் கபில் சிபில் அவரின் அழைப்பில் இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.

2024 ல் பாஜகவை எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்க்க வேண்டும் என்பதே இந்த விருந்தின் ஒரே நிகழ்ச்சி நிரலாக இருந்தது. என்.சி.பி. கட்சியின் தலைவர் ஷரத் பவார், ராஜ்ஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேரக் ஓப்ரையான் மற்றும் கல்யாண் பானர்ஜீ, சி.பி.எம். கட்சியின் சீதாராம் யெச்சூரி, சி.பி.ஐ. கட்சியின் டி. ராஜா, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், ஆர்.எல்.டியின் ஜெயந்த் சௌத்ரி, திமுகவின் திருச்சி சிவா, பிஜூ ஜனதா தளாத்தின் பினாகி மிஸ்ரா, சிவ சேனாவின் சஞ்சய் ராவத், அகாலி தளத்தின் நரேஷ் குஜ்ரால், டி.டி.பி. மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளும் இந்த விருந்தில் விருந்தினர்களாக கலந்து கொண்டது சுவாரசியமாக இருந்தது.

குறிப்பிடத்தக்க வகையில், தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் உருவெடுத்த எதிர்க்கட்சி குழுவின் ஒரு பகுதியாக பி.ஜே.டி., டிடிபி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் ஷிரோமணி அகலி தளம் போன்ற கட்சிகள் இல்லை. பாஜகவை சேராத பெரிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ்வாடி கட்சி மட்டும் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை.

இதில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது என்னவென்றால் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் பெரிய மாற்றங்கள் தேவை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களும் அழைக்கப்பட்டனர் அவர்கள் 23 பேரும் இந்த விருந்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, பூபேந்தர் சிங் ஹூடா, சசி தரூர், மனிஷ் திவாரி, பிரித்விராஜ் சௌஹான் ஆகியோர் இதில் அடங்குவர். இந்த ஜி23 பட்டியலில் அடங்காத இரண்டு தலைவர்களும் இந்த இரவு விருந்துக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஆவார்கள். இந்த இரவு விருந்து பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளரிடம் கேட்டபோது அவர் பதில் ஏதும் அளிக்கவில்லை.
எதிர்க் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து மிகவும் அழுத்தமாக இந்த விருந்தில் பேசப்பட்டது. இதுகுறித்து தற்போது பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்றும் அழுத்தம் தரப்பட்டது. ஒரு சிலர் தேர்தலின்போது பாஜகவை தோற்கடிப்பது மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டனர்.

ஆனாலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சில முரண்பாடுகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது அகலி தளம் பஞ்சாபில் காங்கிரசை எதிர்த்து போட்டியிடும். அதே போன்று உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருக்கும் சமாஜ்வாடி கட்சியை எதிர்த்து காங்கிரஸ் தன்னுடைய வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தும்.

ஆனால் ஜி 23 தலைவர்கள் உட்பட பலரும் உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சியினர் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடக் கூடாது என்றும் இதுதான் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு மைல்ஸ்டோன் ஆக அமையும் எனவும் குறிப்பிட்டனர்.

அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் உத்தரப்பிரதேசத்திற்கு சென்று அகிலேஷ் யாதவ் இருக்க ஆதரவை வழங்க வேண்டும். அவர் பிஜேபி க்கு மிகப்பெரிய எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறார். காங்கிரஸ் அந்த மாநிலத்தில் வெற்றி பெறுவதற்கான இடத்தில் இல்லை. இப்படித்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். நம்முடைய முக்கிய குறிக்கோள் பாஜகவை தோற்கடிப்பது தான். நம் வாக்குகளை பிரிக்க கூடாது. ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சியை ஆதரித்து வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்தால் மட்டுமே வெற்றியடைய முடியும் என்று ஜி23 தலைவர்களில் ஒருவர் தன்னுடைய பெயரை குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பெயரில் இந்த விஷயத்தை இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
அகலி தளத்தின் குஜரால், வெளிப்படையாக, குடும்ப பிணைப்புகளில் இருந்து காங்கிரஸ் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். ஒமர் அப்துல்லாவும் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை பேசினார். காங்கிரஸ் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கூறியவர் 23 தலைவர்களின் நடவடிக்கை இதற்கு முதல் படி என்றும் அவர்களின் முடிவுக்கு தானும் மற்ற தலைவர்களும் ஆதரவு அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார். பிஜு ஜனதா தளத்தின் மிஸ்ரா காங்கிரஸ் கட்சி ஒடிசாவில் பலம் பொருந்தியதாக இல்லை என்று குறிப்பிட்டார். ஆச்சரியப்படும் வகையில் ராகுல் காந்தி அளித்த காலை நேர விருந்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் சரத்பவார் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. நம்பிக்கை இல்லாமல் இருந்தார் பிராந்திய கட்சிகளின் ஒற்றுமைக்காக உழைத்த அரசியல்வாதி இருந்த இடம் குறித்து நினைவு கூறினார் லாலுபிரசாத்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Opposition unity for 2024 on menu sad bjd tdp join dinner meeting

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com