பாரதிய ஜனதா எதிர்ப்பு கட்சிகள் பாட்னாவில் சமீபத்தில் ஒள்றுகூடினார்கள். 2014 நரேந்திர மோடியின் எழுச்சிக்கு பிறகு நடைபெற்ற முதல் முழுமையான கூட்டம் இது எனலாம்.
எனினும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள கே. சந்திரசேகர் ராவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவருக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் அவர் கலந்துகொண்டிருப்பார் என்பதில் எந்த நிச்சயமும் இல்லை.
இதேபோல் நவீன் பட்நாயக், ஹெச்.டி தேவேகவுடா, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரும் கூட்டத்துக்கு செல்லவில்லை. இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் வேளையில் மேலும் சில கட்சிகள் இணையலாம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த எதிர்க்கட்சிகள் முன்னிலையில் பெரிய சவால்கள் உள்ளன. அதை அவர்களும் அறிவார்கள். அந்த சவால்கள் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் வாயிலாக வரவுள்ளன.
ஏனெனில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் எதிர்க்கின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுடன் உறவு வைத்துக் கொள்வதில் அகிலேஷ் யாதவ்விற்கும் மனதில்லை. அதேபோல் பஞ்சாப்பில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இணைய வாய்ப்புகள் மிகமிக குறைவு.
இந்தத் தெளிவான செய்தியை காங்கிரஸும் நிச்சயம் பெற்றிருக்கும். இது தொடர்பாக அந்தக் கூட்டத்தில் சூசகமாக பேசிய லாலு, “காங்கிரஸ் பெரிய இதயத்தோடு நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.
இந்த சோதனை ஏற்பாட்டில் மேற்கு வங்கம் காங்கிரஸுற்கு முதன்மையாக இருக்கும். அங்கு அக்கட்சி மம்தா பானர்ஜியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் இருந்தே காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உறவு தெளிவாக இல்லை. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸும், இடதுசாரிகளும் இணைந்து மம்தா பானர்ஜியை எதிர்த்தன.
மேலும் இடதுசாரிகள் வங்காளத்தில் உறுதியாக உள்ளன. உத்தரப் பிரதேசத்திலும் மாயாவதி காங்கிரஸ் கூட்டணி சாத்தியம் இல்லை.
எனினும், 2024 தேர்தலில் அவரது கட்சி தனித்து போட்டியிடும் என்ற நிலைப்பாட்டை எடுத்தாலும், தேர்தலை நெருங்கும் கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மற்றும் டெல்லியில் நிலைமை மிகவும் சிக்கலானது. காங்கிரஸுக்கு எதிரான அலையில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் கூட்டணி வைக்க ஆர்வமாக இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. காங்கிரஸ் அதிக நம்பிக்கையுடன் இருக்கும் பஞ்சாபில் நிலைமை வேறு.
எவ்வாறாயினும், பாட்னா கூட்டத்திலும் அதற்குப் பிறகும் காங்கிரஸின் மீது ஆம் ஆத்மியின் வெளிப்படையான தாக்குதல் தொடர்கிறது.
டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸின் மாநிலப் பிரிவுகள், ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்திருப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
எவ்வாறாயினும், எதிர்க்கட்சி முகாமில் உள்ள மேலாதிக்க உணர்வு நம்பிக்கை, மேலும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு கட்சிகள் சில "இங்கும் அங்கும் சமரசம்" செய்ய தயாராக உள்ளன என்ற நம்பிக்கையும் தொடர்கிறது.
“இது ஒரு பெரிய சண்டை. சவால்களை நாங்கள் அறிவோம். சில சமரசங்கள் இருக்கும், ஒற்றுமையை அப்படியே வைத்திருப்பதில் வெற்றி பெறுவோம்” என்று காங்கிரஸ் அல்லாத தலைவர் ஒருவர் கூறினார்.
இந்த கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர், தலைவர், பிரதம வேட்பாளர் இருக்குமா? என்ற கேள்விக்கு, “அனைத்து தலைவர்களும் ஒருமித்த கருத்தில் உள்ளனர்” என ஒருவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.