Advertisment

டெல்லி ரகசியம்: மத்திய அமைச்சரை ஆஃப் செய்த ஓம் பிர்லா… குஷியான எதிர்க்கட்சிகள்

ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு கேபினட் அமைச்சர் பதிலளிக்கத் தொடங்கினால், அது தொடர்பான அனைத்து துணை கேள்விகளுக்கும் அவரே பதிலளிக்க வேண்டும் என ஓம் பிர்லா தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
டெல்லி ரகசியம்: மத்திய அமைச்சரை ஆஃப் செய்த ஓம் பிர்லா… குஷியான எதிர்க்கட்சிகள்

செவ்வாய்க்கிழமை, மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா, ஒரு முக்கிய பிரச்சினை தொடர்பான அனைத்து துணை கேள்விகளுக்கும், முதலில் பதிலளித்த அமைச்சரே பதில் அளிக்க வேண்டும் என கூறியது எதிர்க்கட்சிகளிடையே வரவேற்பை பெற்றது.

Advertisment

PMAY-G குறித்த கேள்விக்கு ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதிலளித்துக்கொண்டிருந்தாலும், துணைக் கேள்விக்கு பதில் அளிக்க கேபினட் அமைச்சர் கிரிராஜ் சிங் எழுந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டிஎம்சி எம்பி சவுகதா ராய், அமைச்சர்கள் மாறி மாறி பதில் சொல்வது ஏன் என கேள்வி எழுப்பினார்.

பின்னர் சபாநாயகர் பிர்லா, ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு கேபினட் அமைச்சர் பதிலளிக்கத் தொடங்கினால், அது தொடர்பான அனைத்து துணை கேள்விகளுக்கும் அவரே பதிலளிக்க வேண்டும். ஒருவேளை இணை அமைச்சர் பதிலளித்தால், அவர்தான் துணை கேள்விகள் அனைத்துக்கும் பதிலளிக்க வேண்டும் என்றார். சபாநாயகர் நிரஞ்சன் ஜோதியை பதில கூற உத்தரவிட்டார். இந்த தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் மேஜையை தட்டி வரவேற்றனர்.

திட்டத்தின் அர்த்தம் என்ன?

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது திமுக எம்.பி செந்தில்குமார், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பெயரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என கேட்டார். ஏனெனில், அதன் அர்த்தம் தமக்கு புரியவில்லை என்றார்.

மேலும் பேசிய அவர், எனது தமிழ்நாட்டு தொகுதி மக்கள், அர்த்தம் தெரியாத இந்த திட்டத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே, பாஜக அரசாங்கத்திற்கு எந்தப் பெருமையும் கிடைக்காது. இதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, UPA அரசாங்கத்தின் கீழ் உள்ள இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தை புரிந்து கொள்ள முடிந்தால், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ன என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியும். அது ஒன்றும் தனிநபரின் பெயரில் இல்லை. குறைந்த பட்சம் இது ஒரு தனிநபரின் பெயரில் இல்லை. அது பிரதமரின் பெயரில் உள்ளது என்றார். இதற்கு பாஜக எம்.பிக்கள் இடையே அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

அமைச்சரா பாலிவுட் நடிகையா - அவையில் சிரிப்பலை

செவ்வாய்க்கிழமை, மாநிலங்களவையில் அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பேசுகையில் ஒரு வார்த்தையை மாற்றியதால், அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. அவர், தவறுதலாக டிஎம்சி எம்பி சுஷ்மிதா தேவ்வை பாலிவுட் நடிகையான "சுஷ்மிதா சென்" என்று குறிப்பிட்டார். தேவ் உட்பட அனைவரும் சிரித்ததொடங்கியதும், தவறை புரிந்துகொண்டு உடனே மன்னிப்பு கேட்டார். இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட சுஷ்மிதா தேவ், நான் தனிப்பட்ட முறையில் பாராட்டிற்கு நன்றி கூறுகிறேன், ஆனால் சுஷ்மிதா தேவ் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறேன் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lok Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment